FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Unique Heart on May 28, 2020, 02:18:04 PM

Title: நட்பில் சிறந்தது - ஆணா ? பெண்ணா ?.
Post by: Unique Heart on May 28, 2020, 02:18:04 PM

உறவுகளே இவ்வுலகில் அணைத்து உயிரினத்திற்கும் சுவாசம் எப்படி இன்றியமையாததோ,

அது போல் ஒவ்வொரு உயிருக்கும் இன்றியையாது  நட்பு...

அறவனைப்பில் சிறந்தது பெண்ணின் நட்பு,

ஆயுள் வரை ஆணி வேராய் நிற்பது ஆணின் நட்பு...

தோழ் தாங்கி நிற்பது தோழனின் நட்பு,

தொடர் அன்பின் பால் தழைப்பது தோழியின் நட்பு...

சிறு வருத்தம் வருவாகினும், அதை சிரம் தாழ்ந்து சேர்வது பெண்ணின் நட்பு,

பெரும் வருத்தம் ஆனபோதிலும்,  கட்டி தழுவி கரம் கோர்ப்பது ஆணின் நட்பு..

உறவுகளே !  அவரவர்  அவரவரின் நட்பு முறைதனில் சிறந்தவரே...

நட்பு என்பதே சிறப்பிற்குரியது,  இதில் ஆண் என்ன பெண் என்ன  ?????