FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: joker on May 06, 2020, 11:10:17 PM

Title: முகமூடி
Post by: joker on May 06, 2020, 11:10:17 PM

பேசி பழகிய
நொடி துளிகள் எல்லாம்[
முகமூடி இட்டு பழகியதால்
நிஜம் முகம் மறந்தது
எனக்கு

என் மனதினூடே
யுத்தம் ஒன்று நடத்தி
விடை காண எத்தனிகையில்
கேள்வி மறந்தது
எனக்கு

இதுவும் கடந்து போகும் என
சாலையில் நடந்து கொண்டிருக்கிறேன்
நான் யாரென அறியாமல்
காண்பவர்களிடம் எல்லாம்
முன்முருவல் கடத்தி