FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: thamilan on May 02, 2020, 03:36:27 PM
-
என்ன சொல்லி வழியனுப்புவது
என்ன சொல்லி விடை தருவது
விடை தெரியவில்லை
அழுகை வருகிறது
நெஞ்சு கனக்கிறது
வார்த்தைகள் தடுமாறுகிறது
உடல் பதறுகிறது
பூமி எதிர் மறையாய் சுற்றுகிறது
என்ன செய்வது இப்போது
ஒன்றுமே புரியவில்லை எனக்கு
நீ என்னைப் பிரிகிறாய்
innoruvan ஏன் எனக்கு
இத்தனை இளகிய மனம்
எப்படி அதில்
இவ்வளவு கனமாய் நீ
விடுமுறையில் செல்வதாக இருந்தால்
விரைவாய் வந்துவிடு என்பேன்
சரி என்பாய்
வேறெங்காவது செல்லுவதாக இருந்தால்
கவனமாய் சென்றுவா என்பேன்
சரி என்பாய்
இப்போது என்ன சொல்வது
சரி சொல்ல நீ காத்திருக்கிறாய்
எதுவுமே சொல்ல தோன்றாமல் நான்
என்ன அத்தை மகளே இன்னொருவன் கை பிடித்து
மறுவீடு போக
விடை கேட்கிறாய் நீ
என் வாழ்வின் வழியெங்கும்
நினைவுப் பூக்களிருக்கும்
பூக்களின் வாசமாக
நான் ஒன்றாயிருந்த
நினைவுகள் - இதுவே
பிறகு என் சுவாசமாகக் கூடும்