FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: thamilan on April 20, 2020, 02:26:18 PM
-
கிழக்கின் வெளிச்சம்
விடியலின் கவிதை
இரவில் கண்சிமிட்டும்
நட்சத்திரம் கவிதை
மழையை பொழிவது
விண்ணின் கவிதை
நல்ல மகசூல் தருவது
மண்ணின் கவிதை
தத்தி வருவது
அலைகளின் கவிதை
தவழ்ந்து வருவது
மழலையின் கவிதை
தேடல் என்பது
வாழ்வின் கவிதை
ஊடல் கொள்வது
காதலின் கவிதை
சங்கீதம் என்பது
ஸ்வரங்களின் கவிதை
சிலைகள் எல்லாம்
உளியின் கவிதை
ஓவியம் என்பது
நிறங்களின் கவிதை
உலகெங்கும் ஒலிப்பது
எங்கள் தமிழரின் கவிதை