FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: thamilan on April 18, 2020, 01:23:35 PM
-
பூங்காவில் பூவாசம்
பேனாவில் மைவாசம்
மைனாவே என்மனதில்
உன் வாசம்
மைவிழியால் என்னை கொல்லாதே
நீ ரொம்ப மோசம்
உன் பல் பட்ட
பாவைக்காயும் இனிக்குதடி
உன் காணப்படாத
கற்கண்டோ கசக்குதடி
கவிஞனின் கையில் பேனாவாக
இருப்பதை விட
காதலியே உனது கூந்தலில்
பேனாக இருக்க விரும்புகிறேன்
என் ஆயுள் ரேகையும்
அதிர்ஷ்ட ரேகையும் பார்த்து
பலன் சொல்கிறார் ஜோசியர்
என் ஆயுள் ரேகையும்
அதிர்ஷ்ட ரேகையும்
நீ தான் என்பது தெரியாமல்