FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: thamilan on April 18, 2020, 01:13:36 PM
-
கொரோனா
கொல்லாமல் கொல்லும்
சொல்லாமல் தழுவும்
காட்டில் தீ போலே
எளிதாய் பரவிடும்
நாட்டில் ஜனத்தொகையை
இலகுவாய் குறைத்திடும்
ஆணுக்கும் வரும்
பெண்ணுக்கும் வரும்
குமரனுக்கு வரும்
கிழவனுக்கும் வரும்
கொஞ்சம் ஏமாந்தால்
எமனுக்கும் வரும்
வயது வரம்பு பார்க்காது
பணக்காரனுக்கு வரும்
ஏழைக்கும் வரும்
அது பாராபட்சம் பார்க்காது
தாய்க்கும் வரும்
வயிற்றில் குழந்தைக்கும் வரும்
இரக்கமே இல்லாதது
தப்பித்த தவறி வந்துவிட்டால்
மருந்தும் கிடையாது
நம்மை நாம் பாதுகாத்துக்கொள்ள
விலகியே இருப்போம்
இடைவெளி ஒன்றே
உயிர் காக்கும் மருந்து
நம்மிடம் இருந்து
மற்றவருக்கு வராமல்
மற்றவரிடம் இருந்து
நமக்கு வராமல் இருக்க
தனித்திருப்போம் தவிர்த்திருப்போம்