FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Unique Heart on April 09, 2020, 01:56:10 PM
-
மக்களே ! இப்பூவுலகில் படைப்பினத்தின் படைப்புகள்
ஏராளமாக இருப்பினும்.
படைத்த இறைவனின் படைப்புகள்
கோடானகோடி...
இருப்பினும் படைத்தவன் தன் படைப்புகளிலேயே
சிறந்த படைப்பாக கூறுவது. மனித படைப்பை தான்.
அதன் காரணம். மனித படைப்பிற்க்கு தான் நல்லவை எவை,
தீயவை எவை என்பதை பிரித்தறியும் குணத்தை கொடுத்ததே..
இருப்பினும் வாழும் சில ஆண்டுகளுக்குள் ஏராள மன க்ரோதங்கள்,
வெறுப்பு, இன்னும் எண்ணிலடங்கா எவ்வளவோ பிரிவினை படுத்தும் செயல் பாடுகள்.
மக்களே, நம்மில் பலர் இறை வழிபாட்டில் வேறுபட்டிருப்பினும்.
படைக்க பட்ட அணைத்து மனித உறவுகள் அனைத்தும்,
ஒரு தாய் தந்தையை அடிப்படையாக கொண்டு படைக்க பட்டவரே
என்பதில் மாற்று கருத்தில்லை..
பிறப்பால் நம் அனைவரும் சகோதர, சகோதரிகளே..
ஆகவே மண்ணில் வாழும் சில காலங்களில்,
மனக்கசப்புதனை களைந்து, மனிதாபிமானத்துடன்
அன்பை பகிர்ந்து வாழ வாழ்த்துக்கள் 🌹🌹🌹
💞💞வெறுப்பது யாராகினும், நேசிப்பது நீங்களாக இருஙகள் -MNA..💞
-
என்ன தவம் செய்தோம்
இப் பிறவி பெறுவதற்கு
மேன் மக்கள் மனிதராய்
இப் புவியில் வாழ்வதற்கு
புரிந்தும் தெரிந்தும் செய்தோம்
மனிதம் அற்ற செயல்கள்
வருந்துகிறோம் இன்று.
இனிமேலும் வேண்டாம்
புரிந்துகொள்வோம் நம்மை நாம்
வாழ்வோம் மனிதமுடன் !!!
அருமையான அறிவான கவிதை ..வாழ்த்துக்கள்