FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: aasaiajiith on April 02, 2012, 09:20:36 PM

Title: ஒரு யோசனை , சிறு யோசனை
Post by: aasaiajiith on April 02, 2012, 09:20:36 PM
பொதுவாய் எதையாவது குறித்து வர்ணனை
வரைய வேண்டுமெனில் வெகுநேரம் வரை யோசிப்பேன்

அதுவே, அவள் நாசியின் அழகை  குறித்து வர்ணனை
வரைய வேண்டுமெனில் விரைவாய் வரி வரைந்து வாசிப்பேன்

நீ சுவாசிக்கும், பிராண வாயுவாக நான் விரும்பித்தான் யாசித்தேன் 
யாசகம் யாசிக்கும் யாசகன் என மோசமாக எண்ணித்தானோ
வெளிப்படும் கரி அமிலமாகும் வரம் தரவும் யோசித்தாய் ??

வெறும், ஊசியாக இருந்திருந்தால் கூட குறைந்தது அவள் அழகு
நாசியின், வெளியில் ஆவது அழுந்த இதழ் பதித்துருப்பேன்

அட, சிறு தூசியாக இருந்திருந்தால் கூட குறைந்தது அவள் அழகு
நாசியி,ன் உள்ளேயாவது சில நேரம் இடம் பிடித்திருப்பேன்



கொஞ்சும் குரலில், கொஞ்சியும் கெஞ்சியும் அந்த கொஞ்சும் பேச்சில்
அவள் அழகு நாசியின் பெரும் பங்கினை பிரித்தெடுக்க முடியாது

சீரிய இடைவேளையில் அவள் அழகு நாசியில் இருந்து வெளிப்படும் சுவாசத்திர்க்கே
சொக்க சொக்க சொக்கி விடுவேன்

சிற்சில செயல்பாட்டின் போது ( குனியும்,நிமிரும்,உட்காரும்,சாயும்போது )
சிற் சிற் இடைவேளையில் சிறிதே சிறிதாய்  வெளிப்பட்டு,
என்னோடு மல்லுகட்டி எனக்கு மூச்சுமுட்டி மோட்சம் கூட்டிச்செல்லும்
அச்சிறு முக்கல்களையும் , முனகல்களையும்   

அவள் சுவாசத்தின் சக்களத்தி என்பதா ?
என் சிந்தையை சிதைத்து கந்தையாய் ஆக்க வந்த பட்ட கத்தி என்பதா ?