FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Maran on February 11, 2020, 02:23:22 PM

Title: ஜன்னல்
Post by: Maran on February 11, 2020, 02:23:22 PM


          ஜன்னல்



ஜன்னல் நகர,
கண்களும் முகமும்
கைகளும் நனைய...
ஜன்னல் நகர நகர...
மற்றொரு முகமும்
மற்றொரு கலக்கமும் தோன்ற...
ஜன்னல்கள் நகர மறையப்...
பின்னொரு முகமும் ஏக்கமும்
மின்னலாய்
தோன்றி மறைந்து, தோன்றி...
காற்றில் உலர்த்திய
சோகப் படங்களாய்,
நூற்றுக்கணக்கில்
முகங்கள், கரங்கள்
குலுங்கல், கூவல்... சுமந்து
ஜன்னல்கள் ஓடிக்
கண்ணை மருட்டின.

கூட்டமும், கூச்சலும் கலந்து,
காட்சியின் ஈரம்
கண்களில் தேங்கி
வண்டிப் புகை
வானில் ஊதிப் பறந்தது கண்டேன்
மனத்தின் ஒரு கண
பிரமையில்
பிரிவும், உறவும்
பொது உணர்வாச்சு.

உயிரும் உடலும்
உலகாய் விரிந்தது.
ரயிலும் ஜன்னலும்
நகலென்று மறைந்து
துயரம் காதலின்
ஜன்னலாய் நின்றது.




- மாறன்.