காதலர் தின சிறப்பு கவிதை நிகழ்ச்சி - என்றென்றும் காதல்
எதிர்வரும் காதலர் தினத்தை முன்னிட்டு நண்பர்கள் இணையதளம் சிறப்பு கவிதை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருக்கிறது .
உங்களின் உள்ளம் கவர்ந்தவர்களுக்கு மனதில் உள்ள காதலை கவிதைகளாய் வெளிப்படுத்தலாம். உங்களின் காதலர் தின வாழ்த்துக்களை கவிதைகளாய் வெளிபடுத்த உங்கள் கவிதைகளை இப்பகுதியில் பதிவிடலாம். உங்கள் கவிதைகள் கண்டிப்பாக காதலை பற்றியதாக இருக்க வேண்டும். எதிர் வரும் 10.02.2020 வரை உங்கள் கவிதைகளை இங்கே பதிவு செய்யலாம் ....
என்றென்றும் காதல் நிகழ்ச்சி ஊடாக உங்கள் கவிதைகள் பிப்ரவரி 14 ஆம் தேதி அன்று உங்கள் இதயங்களை வந்தடையும் ....
உன்னோடான
என் பொழுதுகளெல்லாம்
வண்ணம் தெளித்து
வரையப்படுகிறது
ஒரு பட்டாம் பூச்சியின்
இறகுகள் கொண்டு ..
அவ்வப்பொழுது
கேள்விகளாய்
உயரும் புருவ வளைவில்
வளைந்து குளைகிறது
வாகாய் மனது ...
ஒரு மென்புன்னகையில்
உலகின்
மாயங்கள் அனைத்தும்
மயங்கிக் கிடப்பதாய் எண்ணம்
விலகமுடியாத
நிமிடங்கள் கொண்டு
புனையப் படுகிறது
நமக்கான
எதிர்காலம் ..
அவ்வபொழுது
பாய்ந்து மீளும்
பார்வையின் வீச்சில்
வெக்கம் துகில் உரிந்து
பக்கம் வீழ்ந்துகிடக்கிறது
ஏக்கம் எதுவரையோ
அதுவரை நீள்கிறது
உன் விழிக் கணைகள் ...
பல பட்டாம் பூச்சியின்
நகர்வுகள் என
உன் மென்மையான
தீண்டலுக்காய்
காதலோடு காத்திருக்கிறது
மங்கை மனது ...
மனம் நீவி வா
மயக்கும் நீ
மயங்கும் நான் ..
[/b]