FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Unique Heart on January 10, 2020, 08:45:56 PM

Title: birthday wishes to kuyil குயிலுக்கு பிறந்தநாள் வாழ்த்து
Post by: Unique Heart on January 10, 2020, 08:45:56 PM
யாரென்று அறியாது உரிமையாய் பழகினோம்,
இன்னார் என்று தெரியாது இன்னுயிர் கலந்து நட்பு கொண்டோம் .

காலங்கள் கடல் அலை போல கடந்து சென்ற பொழுதும் ,
நாம் பழகிய நாட்கள் நிலவு போல தேய்ந்து போன பொழுதும் ,
நம்முடைய நட்பில் மாற்றங்கள் என்றும் இல்லை.

இந்த தினத்தில் பூத்த மலரான என் தோழிக்கு என் கோடான கோடி வாழ்த்துக்கள்.

என்றுமே நாம் நட்பு என்ற புனிதமான உறவில் உண்மையாக இருக்க பிராத்தித்து.
என்றுமே நம்முடைய நல்லுறவு நீடிக்க வேண்டி
உன் பிறந்த தினத்தில் இறைவனிடம் வேண்டுகிறேன்.