FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Unique Heart on January 07, 2020, 11:09:02 PM
-
வாழ்க்கையில் எவரும் எவருடனும் தொடர்ந்து பயணிக்க இயலாது
ஒவ்வொருவரும் அவரவருக்கான நிறுத்தம் வரும் வேலையில் இறங்கியே
தீர வேண்டும் இதுவே உலக வாழ்க்கையின் சித்தாந்தம். படைத்தவனின்
தீர்மானமும் கூட......
இருந்தும் ftc உடனான எனது வாழ்க்கையில் நான் அன்புகொண்ட உறவுகளையும்,
அளவில்லா நட்புகளையும் சந்திக்க நேர்ந்தது, இது என் வாழ்வின் உண்மையில்
கவலையை மறந்து மன அமைதியுடனும், மன மகிழ்ச்சி உடனும் கடந்து சென்ற
நாட்கள் ஏராளம். இன்றோ என் உறவுகளும் இல்லை, என் உறவினர்களின்
உணர்வுகளும் இல்லை.
மக்களே வாழ்க்கையில் உண்மையான அன்பு கொண்ட உறவுகளையும், அக்கறை கொண்ட
நட்புகளையும் சந்திப்பது கடினம். அவ்வாறு கிடைத்த உறவுகள் என்றும் நிலைக்க வேண்டுமெனில்
உறவுகளுடனான இணைப்பும், நினைப்பும் அவசியம்.
தொடர்பின்றி இருக்கும் எந்த ஒரு உறவுவும், தொலைவிலும் போகலாம், தொலைந்தும் போகலாம்.
Ftc உடன் தொடர்ந்து பயணிக்க வாழ்த்துக்களும், தொடர்ந்து பயணித்தமைக்கு நன்றிகளுடன்..
MN-AARON..... வெறுப்பது யாராகினும், நேசிப்பது நீங்களாக இருங்கள்.... 💐💐💐