FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Jawa on April 01, 2012, 07:10:04 PM
-
காலம் மாறிப் போச்சோ
கலி முத்திப் போச்சோ
பருவங்கள் மாறுது
மாதங்கள் மயங்குது
மனசு ஏனோ பதைக்குது
மருண்டுதான் போகுது
அதிசயமாய் இருக்குது
ஆடியிலே காற்றில்லை
அம்மி பறக்கவில்லை
புழுதியிறைக்கவில்லை
கண்ணில் தூசி உறுத்தவில்லை
மனதில் ஏதோ உறுத்தியதே
பங்குனி பிறந்துச்சி
பதைபதைக்கும் வெயிலில்லை
மப்பும் மந்தாரமுமாச்சி
விடாமல் ஒரு வாரம்
அடைச்சி மழை பெய்யலாச்சி
வானம் பாத்த பூமி கூட
வெள்ளக்காடா மாறிப் போச்சி
விளைஞ்ச பயிர் நாசமாச்சி
காணாத காற்றழுத்தம்
கடலிலே புயலடிக்குதாம்
ஏனிந்த தடுமாற்றம் இதுவரை
இல்லாத பருவ மாற்றம்
அரிதான கொந்தளிப்பு
அதிகமான நிலநடுக்கம்
எதிர்பாராத சுனாமி
அளக்க முடியா இழப்புகள்
வகனப்புகையும் ஆலைக்கரியும்
வான மண்டலத்தை கெடுக்குது
ஆராய்ச்சிக் கழிவும் அழியாத குப்பையும்
நீர்நிலைகளை நச்சாக்குது
அநியாய வேட்டையில்
வனவிலங்கும் அழியுது
கண்ணிகள் அறுந்த சங்கிலியில்
உயிரினங்கள் ஊசலாடுது
மரபணுவை பிளந்து மாத்தி
விளைச்சலிலே விளையாடி
பெருசு பெருசா காயும் கனியும்
கண்ணைத்தான் கவர்ந்திழுக்குது
வீரிய தானியம் முளைக்குது
விதை நெல் என்ன ஆச்சி
வெள்ளாமையிலே புரட்சி
வரிசையாய் வியாதி காத்திருக்கு
அறிவு மட்டும் வளருதா
விந்தை காண விளையுதா
விபரீதம் அதில் விளையுதா
விவேகமே இல்லாமல்
பின்விளைவை அறியாமல்
பொறுப்பின்றி விளையாடினால்
பூமிக்கோளமே நடுங்குதோ
நாளை என்ன நடக்குமோ
-
விஞ்ஞானத்தில் வளர்ச்சி வியக்கத்தக்கது மட்டுமல்ல பயப்பிட வேண்டியதையும் இருக்கிறது நல்ல கவிதை ஜாவா
-
விஞ்ஞானம் அழிவை தந்தாள் அது வீழ்ச்சி!
பாதுகாப்பான வளர்ச்சி மட்டும் தருவதே விஞ்ஞான வளர்ச்சி!
இன்றோ விஞ்ஞானத்தில் மூலம் போட்டிகள் நிரம்பி வழிவதால் தான் அது மக்களை அளிக்கும் அழிவு சக்தியாக உருமாற்றம் பெறுகிறது!
போட்டி பொறாமைகள் ஒளிந்து மக்களின் வளர்ச்சிக்கான விஞ்ஞானம் வளர வேண்டும்!
நல்ல கவிதை சமுதாயமும் அரசாங்கமும் சிந்திக்க வேண்டிய கவிதை ஜாவா மச்சி!
சிந்திப்போம்! சீர்பெருவோம்!
-
nalla varigal