FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: சிற்பி on November 28, 2019, 07:15:36 PM
-
வார்த்தைகள் யாவும்
உயிராகிறது உனை
எழுதும் போது
உனக்காக எழுதும் போது
இந்த வரிகள் யாவும்
கவிதை இல்லை
நீ தான் இந்த உலகின் கவிதை
நிலவுகள் இல்லாமலும்
இரவுகள் இங்கே
இருந்த போதிலும்
உனை நினைவுகள்
இல்லாமல் என்
விடியலல்கள் இல்லையடி
தென்றல் மோதி பூக்கள்
அழுவதில்லை
உன் நினைவுகள் மோதி
இரவெல்லாம் உறக்கமில்லை
மௌனமாக ஒரு நொடியும்
எனை விட்டு போகாதே
அந்த நொடி பொழுதில்
ஓராயிரம் கண்ணீர்
துளி துளியாய்
அவை பேசும்
அழகே
உனக்காக என் வாழ்க்கை
என்று நான் நினைத்தேன்
அந்த தருணத்தில்
இருந்து தான்
என்னையே எனக்கு
பிடித்தது.....
புரிந்து கொள்ளும்
வரையிலும் எதையும்
ரசிக்க முடியாது புரிந்தால்
அதையே நேசிப்போம்
உனக்குள் உறைந்து
உலகையே நான் மறக்க
வேண்டும்..
உன்னோடு கொஞ்சம்
பேசி உனதன்பை
கெஞ்சி யாசிக்க
வேண்டும்
பூக்கள் எல்லாம் உன்
போல் அழகில்லை
பூங்காற்றில் உன் போல
சுகமில்லை....
நீ இல்லாமல்
எப்போதும் நானில்லை...
...... சிற்பி....