FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: சிற்பி on November 20, 2019, 01:42:28 PM

Title: ***pookutty***இவள் பூக்குட்டி***
Post by: சிற்பி on November 20, 2019, 01:42:28 PM
முதன் முதலாக
உன்னை பார்த்த
அந்த நினைவுகளில் இருந்து
நான் இன்னும் மீளவில்லை
பார்த்தவுடன்
என் மேல் காதலா
என கேட்டுவிடாதே

உன்னை பார்த்த அந்த
ஒரு நொடி பொழுதில்
ஒரு யுகமே வாழ்ந்து விட்டேன்
உயிர் உறைந்து
உன்னையே நினைத்து
ஏங்கும் நிலை பிறந்தது

உன் காதல் பார்வைகள் பட்டு
ஒரு காய்ச்சல்  என்னில் வந்தது
அது இதயம் முழுதும் தாக்க
உன் நினைவுகள் அங்கே பூத்தது
அழகான அழகான ஏக்கங்களில்
வரும் கனவுகளாக நீ வந்தாய்

பூக்கள் போல் ஒரு தேவதையாய்
பூமியெங்கும் வரும் வான்மழையாய்

உன்னிடம் பேசும்
நேரத்தில் உலகையே
மறந்து போகின்றேன்
காதலில் இத்தனை அதிசயமா
அது கடவுள் சொன்ன இரகசியமாக

நீ அன்பாய் பார்க்கும் பார்வையிலும்
சில அறிவியல் மாற்றம்
நிகழுமடி....
அணுக்கள் எல்லாம்
உணர்வு பெற ஒரு
உயிரில் மாற்றம் நிகழுதடி

காற்றும் மழையும்
கடல்வானும் என்றோ
என்றோ ஓர் நாள் அழிந்தாலும்
நம் காதல் மட்டும் அழியாது

காலம் யாவும்
இந்த காதலன் இதயம்
உனக்கென மட்டும்
துடித்திருக்கும்

மாற்றங்களால் இது மாறாது
உயிரே போகும் என்றாலும்
அது உனக்கென மட்டும் போகட்டும்

இந்த உலகம் எதையேனும்
நினைத்து போகட்டும்
நான் உன்னை உலகமாக
நினைத்து வாழ்வேன்...
...........  சிற்பி........

(https://i.postimg.cc/n99Th805/images-26.jpg) (https://postimg.cc/n99Th805)
Title: Re: ***pookutty***இவள் பூக்குட்டி***
Post by: பூக்குட்டி (PooKuttY) on November 28, 2019, 02:00:24 PM

https://ibb.co/RN06TCZ
Title: Re: ***pookutty***இவள் பூக்குட்டி***
Post by: சிற்பி on November 28, 2019, 03:34:02 PM

(https://i.ibb.co/6ZKR8NP/preview-Love-Hearts-Background.jpg) (https://ibb.co/6ZKR8NP)

(https://i.ibb.co/b3qQB25/Valentine-Hearts-Inline.jpg) (https://ibb.co/b3qQB25)

(https://i.ibb.co/m9Q1Yxr/36-0.jpg) (https://ibb.co/m9Q1Yxr)