FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: சிற்பி on November 05, 2019, 07:21:12 PM

Title: தேவதை பூமியில்
Post by: சிற்பி on November 05, 2019, 07:21:12 PM
அவள்
கனவு தேவதை
கவிதை தேன்மழை
இரவு வான் நிலா
என் இனிய காதலி

ஐந்து திணைகளை
இவள் ஆட்சி செய்கிறாள்
அன்பின் வழியிலே
எனை மீட்சி செய்கிறாள்

தாய்மை தோற்க்கலாம்
சிலர் நேர்மை தோற்க்கலாம்
உண்மை தோற்க்கினும்
இவள் பெண்மை தோற்க்குமா

மண்ணில் நானோரு
மனிதன் மட்டுமே
இவள் பார்வை பட்டு தான்
கவிஞன் ஆகிறேன்
இவள் பாதம் தொட்டு நான்
புனிதமாகிறேன்

காற்றின் வருடலில்
என் காதலாகிறாள்
உயிர் சுவாசமாக
எனதுயிரை ஆள்கிறாள்

பூவின் இதழென இவள்
தேக வர்ணணை
என் இதயம் என்பது
இவள் ஆளும் அரியனை

தங்க திரவியம்
இவள் சங்க இலக்கியம்

உலகம் எதுவரை
அது இருக்கும் நாள்வரை
இவள் உலகின் தேவதை

இவள் அழகின்
அர்த்தங்கள்
அது மொழியின்
தேடல்கள்....
                 சிற்பி.