FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: thamilan on April 01, 2012, 08:22:07 AM

Title: கொள்கை
Post by: thamilan on April 01, 2012, 08:22:07 AM
கொள்கை என்பது
கூண்டுக்குள் அடைபட்டிருக்கும்
பறவையைப் போல‌
பறவை கூண்டின் கூரையே
வானம் என்று வாதாடும்
கொள்கையுடையவனும் அப்படித்தான்

கொள்கை உடையவன்
அதை மட்டுமே பின்பற்றுவான்
அதனால் அவன் முற்றுப் பெற்றவன் ஆகிறான்

எப்போதும் முற்றுப்பெறாதவனாக‌ இருப்பவன்
சமுத்திரத்தை போல‌
பல ஜீவநதிகள் அவனிடம்
சங்கமித்துக் கொண்டே இருக்கும்

கொள்கையில்லாதவன்
கண்ணாடி போல‌
அவனால் எல்லா வடிவங்களையும்
ரசிக்க முடியும்

கொள்கையுள்ளவன் குளம் போல‌
கொள்கையில்லாதவன் நதி போல‌
தன் விருப்பம் போல வழி அமைத்து
தடைகளை உடைத்து ஓடிக் கொண்டிருப்பான்
Title: Re: கொள்கை
Post by: suthar on April 03, 2012, 01:38:54 PM
kolgaiku nala varigal thamizh
epadilam yosikranga
namaku than vara matuthu
Title: Re: கொள்கை
Post by: Global Angel on April 05, 2012, 11:52:57 PM
சிறந்த கவிதை தமிழன் நன்று