FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Jawa on April 01, 2012, 08:01:09 AM

Title: இறைவனுடன் சில பொழுது ...
Post by: Jawa on April 01, 2012, 08:01:09 AM
இறைவா நீ இறந்து போனாயோ!
மனிதர் படும் துன்பம் பார்க்காது இருக்கின்றாய்..
எல்லோரும் சொல்வர் இறைவனின் பிள்ளைகள் நாம் என்று
காரணம் உன்னை அவ்வளவிற்கு மகத்தானதாக கருதுவதால்
ஆனால் இக்கால கட்டத்தில் எத்தனை அழிவு?
எத்தனை துன்பம்?
அத்தனையும் உனக்குப் புலப்படவில்லையா?
இது தான் எல்லாம் ஒருவன் என்று பொருளா?
உன்னிடம் அனைவரும் கேக்கும் கேள்வி
ஏன் படைத்தாய்?
எதற்க்காக படைத்தாய்?
இங்கே ஏன் படைத்தாய்? எனப் பல ஆயிரம் கேள்விகள்
இத்தனை கேள்விகளுக்கும் பதில் இல்லாததால் தானோ
எமது கண்ணுக்குப் புலப்படாமல் இருக்கின்றாயோ இறைவா?