FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: supernatural on April 01, 2012, 12:45:11 AM

Title: படித்ததில் பிடித்தது.
Post by: supernatural on April 01, 2012, 12:45:11 AM
                                     உணர்வு

வெற்றி, தோல்வி பெற்றிட அன்பு ஒன்றும்
போட்டியோ தேர்வோ இல்லை
அது ஒரு அற்புதமான உணர்வு
உணர்வின் வெளிப்பாடு

                         வலி

எனக்கு   வலியின் மீது உடன்பாடில்லை
சில காலம் முன்புவரை
"வாழ்கை வலி நிறைந்தது "
 வாழ்க்கைபயணத்தில் திக்கற்றவர் திக்குமுக்காடி
தன் அனுபவத்தை திணிக்க முனைந்து
புனைந்த தத்துவம் இது .
என்னை கேட்டால் " வாழ்கை வழி நிறைந்தது "
வாழ்கை பயணம்" நம்பிக்கை "எனும்  சீரான சரியான
பாதையில் இருக்கும்வரை
 திக்கும் உண்டு திசையும் உண்டு  .