FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: supernatural on April 01, 2012, 12:38:23 AM

Title: ரசித்ததில் பிடித்தது....
Post by: supernatural on April 01, 2012, 12:38:23 AM
முன்னால் , நீ  இருந்ததும் இல்லை ,இருக்கவேண்டும் என  எதிர்பார்த்ததும் இல்லை - இருந்தும்
உன்னால், எனக்கும் தமிழ் தடை இன்றி வரும், கற்பனை  சிறகுகள் விரியும் என்று நினைத்ததில்லை
தன்னால் தடை இன்றி தமிழ் தவழ்கின்றது ,கவிதை மனம் கமழ்கின்றது
உன்னால் மட்டும் எப்படி சிந்தாமல் சிதறாமல் என் மனதை  உதற முடிந்தது ?
என்னால் இதயத்தில் உதிரம் சிதறும் பொழுதும் கதற கூட முடியவில்லையே


                                          மரிக்கவை                               

தேறா காரணத்தை கூறி
என்னை பாராமுகமாய் தவிக்கவிட்டு
ஓராயிரம் முறை உன்னை நினைக்கசெய்து
ஆறா ரணத்தை பரிசாய் அளித்து
உன் நினைவில் என் மனதை
துகள் துகளாய் தெரிக்கவைத்தவளே !
இருந்தும் உன்ஆசை தீரவில்லை என்றால்
நேராக வந்து என் உயிரை மரிக்க வை

                             சொல்லிவிடு

கவிதையிலே  கனல் மூட்டி போறவளே !
மௌனத்திலே  அதை அணைக்க சொன்னவளே
பெண்ணே, என்  சொல்லெல்லாம்  முள்  ஆனதே   
ஐயோ ,  என் சுவாசமும்  சூடானதே

என் இதயமே இடம் மாறி துடிக்காதே
என் விழியே கண்ணீரை வடிக்காதே

என் இதயமே இடம் மாறி துடிக்காதே
என் விழியே கண்ணீரை வடிக்காதே

பெண்ணே பொய் என்பது மெய் ஆகினால் ,ஐயோ
மெய்  என்பது என்னாகுமோ  ?
பொய் புரிதல் நிலையாகுமோ ? சொல்லி விடு