FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: JasHaa on August 24, 2019, 02:36:53 PM

Title: யாரிந்த கள்வன் ?
Post by: JasHaa on August 24, 2019, 02:36:53 PM
உதட்டோரம்  சிரிப்பை  அடக்கி ,
கரமிழுத்து  அணைத்திட  துடித்தான் கள்வனவன் !

யாரிந்த  கள்வன்  ?
கள்ளப்பார்வையில் என் இதயம்  நுழைந்து 
அணுஅணுவாய் என் உயிரணுக்கள்  தின்பவன் 

இரத்தக்குழலில் மெல்லிசை மீட்டி என்ஜீவன் கொய்கிறான்.
முகமூடியின்றி, கத்தியின்றி கண்களால் கன்னிமனம் களவாடி  செல்கிறான்

என்னுள் அவனது சுவாசம் நுழைத்து 
நினைவுகளை  மூச்சுக்குழலில்  நிரப்பிச்செல்கிறான்...
நினைவு தழும்பலில்  மூச்சுமுட்டி  தத்தளித்து  தடுமாறுகிறேன்.

சிலிர்க்கும்  சாரலில்  யாரை  தேடி அலைகிறதோ
இந்த பாழாய்ப்போன  மனம் ..பறந்து செல்ல 
விழையும் உணர்வுகளை கட்டவிழ்க்க  முடியவில்லையே!

அந்தகாரருளில் உறக்கம் தொலைத்து
நரகமாய்  நகர, என்புருவம் நீவும் அவன்
விரல்ஸ்பரிஸம் கண்ணீர் கரைஉடைக்கிறது

ஒரு ஊடலில் ஏனடா இந்த காதல் என்றேன்  ?
உனது திமிர்  என்றான்.
மிதப்பாய் ஒரு பார்வை  வீசி  சென்றேன் ,
நெஞ்சம் தளும்பும்  காதலுடன் !!!
Title: Re: யாரிந்த கள்வன் ?
Post by: RishiKa on August 28, 2019, 02:31:28 PM

Jasha! திமிராய் ஒரு  காதல் ! :P :P ;) ;) :-* :-*
Title: Re: யாரிந்த கள்வன் ?
Post by: Unique Heart on September 01, 2019, 02:04:17 PM
நல்லதொரு  கவிதை, காதல் நயத்துடன்.

வாழ்த்துக்கள் 💐💐💐