FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: சிற்பி on August 21, 2019, 08:43:07 AM
-
அடி பெண்ணே
ஒரு கவிதையிலே எனை
எனை கடத்தி
சென்றவளே
யாரடி நீ
பூவா ஒரு புயலா
இதய பூக்களை
எல்லாம்
கொள்ளையடித்து கொண்டு
போகிறாய்
நீ என்னால்
தொடகூட முடியாத
வெண்மேகம்
வானுயர பறந்து
செல்லும் 🐦 பறவை
இந்த உலகம்
உனது காலடியில்
அழகே கவிதை
சொல்ல வந்த குயில்
நீ வசந்த காலத்தின்
மெல்லிய தென்றல்
மெல்ல தொட்டு தழுவிய
போது என்னை தூக்கி
சென்றுவிட்டாய்
சில நேரங்களில்
என்னுல்
எரியும் 🔥 தீயாக நீ
அன்பே
சில நேரங்களில்
குளிரும் நிலவாக நீ
நீ அழகானவள் தானடி
அன்பிலும் பண்பிலும்
மண்ணிலும் மண்படைத்த
பெண்ணிலும்
நீ மட்டுமே
அழகானவள்
அது எப்படி
நூற்றாண்டு கால
வாழ்க்கைக்கு
நொடி பொழுதில்
விளக்கம் தருகிறாய்
ஆலையங்களில்
கற்சிலைகள் ....
இதயங்களில் மட்டுமே கடவுள்
அன்பின் அன்பாய்
நீ அந்த கடவுளுக்கு
கொஞ்சம் மேலானவள்
இதயத்தில் இருந்து
இதழ் ஒன்றை
பிரித்து கண்மணி
உனக்காக கவி ஒன்று
வடித்தேன்
எங்கோ இருப்பவனே
நிலவாக
தென்றல் காற்றாக
நீல வானமாக
என்னோடு இருக்கிறாய்
இதயத்தில் ஒரு
இதயமாய் நீ எப்போதும்
எனக்குள் நினைத்திருப்பாய்
நான் என்ற நிலையில்
நான் இதுவரை
யாருக்கும் தலை
வணங்கியதில்லை
முதன் முறையாக
ஏனோ தெரியவில்லை
உன்னிடம் தலை
வணங்குகிறேன்
இதயத்தை வென்றவளே
என்னையும்
கொஞ்சம் பாரடி
என்னோடும்
சில நேரம்
பேசடி அது போதும்
எனக்கு.....
........ சிற்பி.....
(https://i.postimg.cc/GT18420Z/Cute-Love-Kavithai-In-Tamil-1-768x768.jpg) (https://postimg.cc/GT18420Z)
-
சிற்பி அவர்களே !என்னை பாராட்டி இரண்டு
வார்த்தை போதும் .. முழு கவிதை தேவை இல்லை !
இதை நான் எதிர் பாக்கவும் இல்லை ..விரும்பவும் இல்லை !
தயவு செய்து இப்படி கவிதைகளை தவிர்க்க வேண்டுகின்றேன் ! நன்றி
-
சரி I understand your ... sorry for my mistake