FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Unique Heart on August 17, 2019, 03:34:03 PM

Title: எழுத்தாளன்
Post by: Unique Heart on August 17, 2019, 03:34:03 PM
எழுத்தாளனின் எண்ணங்களில் இருப்பது ஏராளம், 
அவை அனைத்தும் எழுத்துக்களில் வெளிப்படுவதில்லை.

மாறாக  அவன் எண்ணங்களில் இருக்கும்
சிறு நினைவுகள் மட்டுமே எழுத்துக்களில் உருவகப்படுகிறது.

அணைத்து மக்களின் உள்ளங்களையும் உணர்ந்து
உணர்வுகளை உருவகப்படுத்தும் அவனால்,   
ஏனோ  அவனின் உள்ளத்தை  அவனால் முழுமையாக
உணரவோ, உருவகப்படுத்தவோ முடிவதில்லை. 

கனவுகளை சுமந்த இதயத்துடன், கவலையுடன்
கூடிய கானல் நீரான பயணத்தில் இவன்..

எதுவாகினும் எழுத்தாளன் சுயசிந்தனையாளனே..... MNA...
Title: Re: எழுத்தாளன்
Post by: சிற்பி on August 20, 2019, 11:12:20 AM
கவிஞன் யார்?

எழுதுகோல் தாங்கி எழுதுவோர்
புவியில் எத்துணை
மாபெரும் கவிஞன்
விழுதுபோல் வளர்ந்து
விண்னுயிர் வரைந்து
விந்தைகள் செய்பவன் கவிஞன்
ஏற்றம் தரும் நல் வழிகளில்
சென்று மேன்மையை
அடைபவன் கவிஞன்
இறந்தும் புகழுடன்
இகத்தினில் இறக்காதிருப்பவன்
கவிஞன்
மண்ணில் மற்றவர்
மாண்புடன் வாழ்ந்திட
வாழ்த்தியே வாழ்பவன் கவிஞன்
கரையலா படைப்புகள்
கன்னலாய் பகற்த்தியே
காலத்தை வென்றவன் கவிஞன்

        .........முனைவர்..இராகவன்...
மலேசியா கவிஞர்