FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: RishiKa on August 15, 2019, 12:08:28 PM
-
திக்கு கால் முளைத்து
சாதி ஆனதோ ?
மதத்திற்கு மதம் பிடித்து
மரணம் ஆகிகின்றதே...
இதுவா சுதந்திரம்?
ஆங்கிலேயரிடம் அடிமை பட்டது
அறியாமையினால் ....
வளமையை கை விட்டது
புரியாமையினால் ...
அந்நிய நாட்டுட்கு அடிமை பட்ட நாம்
இன்று ...
ஆண்ட்ராயிட் போனில் ..
அடிமை பட்டு கிடக்கின்றோம் ...
நம் தலைவர்கள்
தேசத்திற்காக சிறை செல்ல
நாமோ வலைத்தளங்களில்
நமக்கு நாமே சிறையாய்...
சூரியனுக்கும் இரவில்
சுதந்தித்திரமில்லை ...
சந்திரனுக்கும் பகலில்
சுதந்தித்திரமில்லை ...
வீசும் காற்றை சுவாசிக்க
சுதந்தித்திரமில்லை ...
பொங்கி வரும் தண்ணீரை
குடிக்க சுதந்தித்திரமில்லை ...
சொந்த பூமிக்கும் போராட்டம்
செய்யும் காலம் இது...
விளையும் பயிருக்கு
விலை கிடைக்காமல்
வீணாக உயிர் இழக்கும் காலமிது ..
இலட்சியத்தை சாதிக்கும்
பெண்களிடமும் லட்ச கணக்காய்
வர தட்சணை எதிர்பாக்கும் காலம் இது ...
ராஜாக்கள் மாறி ...
அரசியல் மாறி ...
ஆட்சிகள் மாறி ...
சட்டங்கள் மாறி ....
கல்விமுறை மாறி ...
ஆடைகள் மாறி ...
நாகரிகம் மாறி ..
அகமும் புறமும்
மாறினாலும் ...
மாறாதது நம் ஒருமைப்பாடு !
இந்தியாவை இமயம் என
தூக்கி நிறுத்துவோம் !
பெற்ற சுதந்திரத்தை போற்றுவோம் !
வாழ்க பாரதம் ! ஜெய் ஹிந்த் !
-
தேசத்தின் விடுதலைக்காக
எத்தனையோ தியாகிகள்
இன்னுயிரை தந்தார்கள்
கண்ணீரும் இரத்தமும்
கலந்து கலந்து
ஏறத்தாழ இருநூறு ஆண்டுகள்
அடிமைப்பட்டு
சுதந்திர காற்றை
நாம் சுவாசிக்கிறோம்
ஆனாலும் நம் தேசம்
இப்போது
சாதி மத பேதங்கள்
சமூக ஏற்ற தாழ்வுகள்
ஊழல் நேர்மையற்ற
அரசியல் தலைவர்கள்
தரமற்ற கல்வி மருத்துவம்
என் இந்திய திருநாட்டில்
பெருமை இந்த
உலகத்திற்கே
நாகரிகத்தையும்
பண்பாட்டையும்
கலாச்சாரத்தையும்
கற்பித்தவர்கள் நாம்
ஒரு மனித சமுதாயம்
அழிவின் விளிம்பில்
செல்லும் போது
ஒரு கவிஞன் வந்து தான்
🔥 தீக்குச்சி கொழுத்துகிறான்
என்கிறார் கவிப்பேரரசு
ஒரு மொழிக்கு தாயும் தந்தையும்
கவிஞனே
சமுக பிரச்சினைகள்
பற்றி பேசும்
கவிதைகள் இப்போதைக்கு
மிகவும் அவசியம்
ரிஷிகா
உங்க கவிதை
மிகவும் சிறப்பு
இந்த கவிதை உனக்கான
மதிப்பை மேலும்
தருகிறது
ஏதோ எழுகிறேன் நானும்
சில சில கவிதைகள்
என் சொல்லாமல்
உண்மையில் தரமான கவிதை
இது உனக்கு வாழ்த்துக்கள்
அன்பு சகோதரி உனது
கவிதை பயனம் தொடரட்டும்
....... சிற்பி....