FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: சிற்பி on August 14, 2019, 05:43:33 PM
-
ஏனோ
அடி ஏனோ
உன்னை மட்டும்
தேடுகிறேன்
அன்பே எனக்கு சொல்
தொலைந்தது நானா
அல்லது
தொலைதூரத்தில்
உள்ள நீயா
உயிர் தோழியே
உனக்காக ஒரு கவிதை
கடல் அலைகளை 🌊
தாண்டியும்
உனைத் தேடி
வந்ததடி எந்தன்
நினைவலைகள்
எனது உயிரை
நான் தேடும்
அந்த தருணத்தில்
இந்த
யுகங்கள் யாவும்
தொலைந்து போனதடி
இனியவளே
இது நிஜம் தானா
சொல்....
எதற்காக இந்த
மனதோடு ஏக்கங்கள்
உனது நினைவுகள்
எனை தீண்டும்
போது ....
எனதுயிர் துளி துளியாய்
கரைந்து போனது
அன்பே
உன்னால்...
என் மனதோடு
சில சலனம்
அவை என்னில்
மறுபடி மறுபடி
ஜனனம்
எங்கே போனது
என் இதயம்
உனை தேடி தேடி
தொலைந்து போனதடி
உன்னில் மறைந்து
போனதடி...
...... சிற்பி...
(https://i.postimg.cc/yJXRzPk2/Tamil-Love-Kavithai-Galleries-8-768x768.jpg) (https://postimg.cc/yJXRzPk2)