FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: supernatural on March 31, 2012, 05:09:51 PM

Title: இனிமை காலம்...
Post by: supernatural on March 31, 2012, 05:09:51 PM
இன்பமான வேலையில்...
மனம்மயங்கும் தருணத்தில்...
அழகாய் சில ....
நியாபகங்கள்...

காலத்தை சொற்ப நேரம்...
பின்னோக்கி கொண்டு செல்ல ...
மனதோரம் சின்னதாய்
ஒரு ஆசை (பேராசை )....

அழகான மழலை பருவம்...
இதமான பள்ளி பருவம்...
துள்ளும் இளமை பருவம் ...
பருவங்கள் மூன்றும் ..
பறந்தோடி போனதே...

தாயின் பாசத்தில்...
தந்தையின் அரவணைப்பில் ....
நண்பர்களின் அன்பில்...
இப்படி எத்தனை..எத்தனை...
நினைவுகள்....
இனிமையான நினைவுகள்...

நண்பர்கள் கூட்டமாய்..
கவலைகள் மறந்து...
சிறகுகள் விரித்து...
பயம் மறந்து ..
பறந்த காலம் ..
மனம் மறவா...
கடந்த காலம்...
மறக்கமுடியா...
இனிமை காலம்...

திரும்ப வருமோ...
அந்த இளமை  காலம்???
பாசம் நிறைந்த..
அருமை காலம்???

தவம் செய்ய துணிந்தேன்....
வரம் ஒன்று வேண்டி.....
நிழலாய் மாறி..
மறைவாய் போன  ....
பொற்காலத்தை...
திரும்ப பெரும்...
அரும் வரம் வேண்டி....!!!
Title: Re: இனிமை காலம்...
Post by: suthar on March 31, 2012, 09:25:10 PM
Iniya kaalamthan
antha ilamai kaalam
athu vasantha kaalam
anbaai iruntha kaalam
thulli thirintha kaalam
nizhalaagi pona kadantha kaalam.