FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: RishiKa on August 05, 2019, 11:13:13 PM
-
எதையோ தேடி களைத்து
அசதியுற்று அமர்ந்த வேளையில்
எதேச்சையாய் அருகில் கிடந்த
பொருளாய் இருக்கிறது நிம்மதி !
நினைவுகள் உயிர் இல்லாதவைதான்!
இருப்பினும் ....
சிலர் உயிர் வாழ்வதே ..
அந்த நினைவுகளால் தான் !
நிஜங்கள் தோற்கும் போதுதான்
நிழல் சுமையாகிறது !
சுகமென்று நினைக்கும்
அனைத்தும் சுமையாகி போகின்றது !
இரு விரல்களில்
தினமும் புதைக்கப்படுகின்றது
பழைய நினைவுகள் ...
மொழிகளால் பேசி கொண்டு இருந்த
நாம் இன்று
மௌனங்களால் ....
மொழிகளை கடந்த நிலை தான்
மௌனம் என்று யார் சொன்னது?
வலிகளை கடந்த நிலைதான் மௌனம்
இது நான் கண்டது !
அர்த்த ஜாமத்திலும்
அமைதியாய் வந்து போகின்றன
சில நினைவு பேரலைகள்
இரவு முழுதும் நீந்துகிறேன்
காலையில் கரை சேர்க்கிறேன்
கலைந்த கனவுகளுடன் ....
-
ஞாபங்களின் காலடி
சுவடுகளை இரவின்
அமைதியில் கேட்டுகொண்டிருக்கும்
பாதை நான்
..........*தாகூர்...
எகாந்தமாய் ஒரு
இதயம் இப்படி
பேசுகிறது
அடி ஏகாந்த பறவையே
நீ உலகின் எல்லா
அழகுக்கும் அன்புக்கும்
அணி சேர்கிறாய்
..... சிற்பி...