FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: சிற்பி on August 01, 2019, 09:42:50 AM

Title: மனிதகுமாரன் இயேசு நாதர்
Post by: சிற்பி on August 01, 2019, 09:42:50 AM
மனிதனாக மறைந்து
அவர் கடவுளாக பிறந்தார்
தத்துவம் தத்துவம்
மனிதனும் கடவுளும்
ஒன்றுதான் உணர்ந்தோம்

அவர் மனிதனாக பிறக்கையில்
சிலுவையில் அறைந்தோம்
கடவுளாக வரும்போது
சிலுவையும் தொழுதோம்
நித்திய ஜுவனின்
சத்திய சாட்சிகள்

யாவரும் வாழ்ந்திட
எத்தனை வழிகள்
நீ பெற்றவை
யாதுமே வலிகள்

கடவுளின் தூதராய்
கர்த்தரும் பிறந்தார்
கடவுளும் வணங்குமோர்
கடவுளாய் உயர்ந்தார்

அன்பே இந்த உலகாளும்
மந்திரம்
அதுவே இயேசுவின்
அடிப்படை தத்துவம்

ஆதாம் ஏவாள்
ஆதியின் பிறப்பு
விவிலிய வேதம்
வாழ்க்கை பாடம்

மனிதன் வாழ்வில்
ஒரு முறையாவது
யேசுவின் போதனைகள்
படிக்க வேண்டும்
அவர் சொன்ன
அன்பின் வழியில்
போகலாம்
... சிற்பி




(https://i.postimg.cc/m1jvXdvr/FB-IMG-15632733167007080.jpg) (https://postimg.cc/m1jvXdvr)