FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Unique Heart on July 31, 2019, 02:42:04 PM

Title: ஏமாற்றத்தை தந்த இப்பூவுலகை பற்றிய கனவு
Post by: Unique Heart on July 31, 2019, 02:42:04 PM
தாயின் கருவறையை போன்ற அமைதியான உலகை எதிர் பார்த்தேன்,
நிகழ்விலோ அமைதி எனும் உணர்வுதனை வார்த்தைகளில் கூட உணர முடிவதில்லை.

மகிழ்ச்சி எனும் மாணிக்கத்தை  மனதளவிலேனும் எதிர்பாத்திருந்தேன்,
நிஜத்தில் நிம்மதி எனும் நிலை கூட நிரந்தரமில்லாது போனது...

மக்களை மனிதராய் பொதுநலனாய்  சிந்திக்கும் நிலையில் காண விரும்பினேன்,
இங்கு பொதுநலனின் சாயல் கூட இல்லாது சுயநலவாதிகளையே காண நேர்ந்தது.

மழழை உள்ளம் கொண்ட மக்கள் வாழ்த இப்பூவுலகில், 
இன்று மனிதநேயத்துடன் சிந்திக்கும் மக்களை காண்பதே அரிதாகி போனது..

இன்னும் விமரசத்திற்குள் அடங்கா விடயங்கள் ஏராளம்.

இவை அணைத்து  சமுதாயம் சீர்கெட்டு விட்டதோ என வினவினேன்,

கிடைத்த பதிலோ  நீ இச்சமூகத்துடன் பயணிக்க தகுதி அற்றவன்....

கணவாய் போன நினைவுகள் ஒருநாள்
நினைவாக மாறும் என்ற நம்பிக்கையுடன் ---MNA.....

வீழ்வது நானாகினும் வாழ்வது என் இனமாக இருக்கட்டும் .......

Title: Re: ஏமாற்றத்தை தந்த இப்பூவுலகை பற்றிய கனவு
Post by: DoRa on July 31, 2019, 03:03:26 PM
kolakaraa nice kavithai ;D ....kandipaa  oru nall nijamave nadakum ungal kanavugal unga kkavithai thodara vazhalthukal ;D kolakaraaa ::)
Title: Re: ஏமாற்றத்தை தந்த இப்பூவுலகை பற்றிய கனவு
Post by: Unique Heart on July 31, 2019, 07:08:25 PM
Kolakaari...  nanrigal pala  unakku half kg nandu fry... 😉😉😉💐💐💐