FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: சிற்பி on July 30, 2019, 07:53:47 PM

Title: Masha Siyanaa பிறந்தநாள் வாழ்த்துக்கள்
Post by: சிற்பி on July 30, 2019, 07:53:47 PM
பெண்ணே
நம் தமிழன்னை
முதன் முறையாக
மிகவும் பெருமைபட்டாள்
நீ பிறந்தபோது தான்
இந்த பூமியில்
அன்பு பிறந்தது
அழகு பிறந்தது
கவிதை பிறந்தது

அன்பே
உனது அழகை
வர்ணனை செய்திட
தன்னிடம் வார்த்தையில் லை
தமிழிடம் வார்த்தையில்லை

நீ மோனலிஸா ஓவியமாக
காளிதாஸ் காவியமா
இல்லை இல்லை
நீ பாரதி கண்ட
புதுமை பெண்

அழகே
நீ இதயங்களை
வலைவீசி பிடிக்கும்
விந்தையை யாரிடமிருந்து
கற்றுக்கொண்டாய்
உன் இதழ்கள்
பேசும் வார்த்தைகள்
கவிதைகளாகி
உயிர்வாழும்

நீ பூமியில் பிறந்த
வான் நிலா
என் இதயம்
வென்ற பெண் நிலா
நீ தமிழ் பேசும்
தத்துவ கவிதை

உன் கால்கொழுசின்
ஓசைதனில்
காவியங்கள்
பல நூறு
காலடி சுவடுகள் தான்
காப்பியங்கள்
ஐந்தாகும்

தாஜ்மகால்
காதல் பேசும்
காலம் காலமாக

ஆனாலும் அந்த
தாஜ்மகால்
காதலின் சோகம்
காதலின் ஏக்கம்
காதலனின் தோல்வி

நீ பிறந்த போது
ஒரு பெண்
அன்று பிறக்கவில்லை

இந்த உலகின்
எல்லா அழகும்
வந்து பிறந்தது

அன்புடன் பிறந்தநாள்
வாழ்த்துக்கள்

  சிற்பி....
(https://i.postimg.cc/BtS0D4Xd/FB-IMG-15632733167007080.jpg) (https://postimg.cc/BtS0D4Xd)
Title: Re: Masha Siyanaa பிறந்தநாள் வாழ்த்துக்கள்
Post by: MaSha on July 30, 2019, 08:48:49 PM
உங்க வாழ்த்துக்களுக்கு உங்க கவிதைக்கும் மிக்க மிக்க நன்றி friend :)