FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: சிற்பி on July 28, 2019, 12:10:10 PM
-
முக்கடலும் சங்கமிக்கும்
முத்தமிழின் கரையோரம்
கதிரவனின் கண்விழிக்கும்
காட்சியினை காணமுடியும்(குமரி முனை).
இரவெல்லாம் இனியவளின்
நினைவுகள் என்னை தாலாட்ட
கண்ணெதிரே ஆதிசிவன்
தரிசனமும் காத்திருக்க
அன்னையவள் முகம் பார்த்து
விடிந்ததம் மா என் பொழுது
மண்ணுலகம் விண்ணுலகம்
மன்னவன் போல் வாழ்ந்திருக்கும்
பூவுலகில் மலர்ந்து விட்ட
பூக்கள் எல்லாம் எனக்காக
பூத்திருக்கும் மங்கையரின்
வாழ்த்துகளும் வந்தது வே
கவியாளும் மங்கை அவள்
கண் அழகை பார்பதற்கு
புவியாள பிறந்தவன் போல்
புறபட்டு நான் சென்றேன்
இளையவளின் எழில் காண
மனதோடு ஏக்கங்கள்
ஒரு இளவரசன் போல்
நானும் அவளுக்காய்
காத்திருந்தேன்
ஆனாலும் அந்த அழகு மங்கை
எனை பார்க்க வரவில்லை
இமைக்காமல் மலைக்காமல்
மனதோடு சோகங்கள்
காலையிலே கண்ணீரில்
கரைந்துருகி நான் நின்றேன்
நாள் முழுவதும் ஒருவிதமாய்
கடந்து செல்ல
இரவு எனது வீட்டில்
அலைப்பு மணி ஓசை
யாரென்று நானும்
எதிர்ப்பார்த்து போக
நானென்று அவளும்
எனை பார்த்து நிற்க
என்னவளே எனக்காக
என் முன்னால் நின்றிருந்தாள்
அன்பான இதயங்கள்
எப்போதும் பிரிவதில்லை
அழுதாலும் சிரித்தாலும்
அன்புக்கு பிரிவில் லை
....சிற்பி... சில நேரங்களில் கவிதைகள்
சில நேரங்களில் மௌனங்கள்.
(https://i.postimg.cc/9wwYzmg0/images.jpg) (https://postimg.cc/9wwYzmg0)