FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Unique Heart on July 28, 2019, 01:12:02 AM

Title: சந்திப்பு
Post by: Unique Heart on July 28, 2019, 01:12:02 AM
உலகில் படைக்க பட்ட எந்த உயிரும்,
ஒவ்வொருவரையும் காரணங்கள் இன்றி சந்திப்பதில்லை..

சிலர் தனிமையில் வாடியதின் விளைவால்,
உணர்வுகளை பகிர்ந்து கொள்ள ஆறுதலான
உறவை சந்திக்கின்றனர்.

சிலர் உள்ளத்தின் நேசம் தனை பகிர்ந்திடவே
காதல் எனும் உறவை சந்திக்க்கின்றனர்.

பலர் உரிமை எனும் பந்தத்தை பகிர்ந்திட
நட்பு எனும் உறவுகளை சந்திக்கின்றனர்..

சிலர்  வாழ்வில் உண்மையாளராக  இருக்க
எதிரிகளையும் சந்திக்க நேரிடும்.

எதுவான போதிலும் சந்திப்பு என்பது
நம்மீது சில காரங்களுக்காக விதிக்க பட்டதும்,
தீர்மானிக்க பட்டதாகவுமே இருக்கிறது......

சந்திப்பு எதுவாகினும் சஞ்சலமின்றி கடந்திட
நேசம் எனும் ஆயுதம் உறுதுணையே... MNA...