FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Forum on July 25, 2019, 01:39:13 PM

Title: FTC எட்டாம் ஆண்டு நிறைவு - சிறப்பு கவிதை நிகழ்ச்சி
Post by: Forum on July 25, 2019, 01:39:13 PM
நண்பர்கள் கவனத்திற்கு ...

நம் அரட்டை மற்றும் பொது மன்றத்தின் எட்டாம் ஆண்டு  நிறைவை முன்னிட்டு ... இந்த கவிதை பகுதியில் நீங்கள் உங்கள் உங்களின் கற்பனை திறமைய வெளிப்படுத்தும்  பொருட்டு  கவிதை மழைகளை  பொழியலாம் ...
 கவிதை நம் நண்பர்கள் இணையத்தளம் சார்ந்ததாய் மட்டுமே அமையவேண்டும் .. எதிர்வரும் ஆகஸ்ட்  1 ஆம்  தேதிக்கு  முன்பாக  உங்கள் கவிதைகளை பதிவு செய்யுமாறும்  கேட்டுக் கொள்கின்றோம் ..பதிவு செய்யப்பட்டகவிதைகள் எட்டாம்  ஆண்டு நிறைவு நாள் நிகழ்ச்சியின்பொழுது நண்பர்கள் இணையதள வானொலி மூலம் உங்களை வந்தடையும்.
 



Title: Re: FTC எட்டாம் ஆண்டு நிறைவு - சிறப்பு கவிதை நிகழ்ச்சி
Post by: NiYa on July 28, 2019, 10:34:55 PM
வேறுபட்ட இனம் மாறுபட்ட மதம்
ஏதேதோ நாடுகளில் வாழும் நம்மை
ஒன்றிணைத்தது இந்த இணையத்தளம்

நமக்குள் எதனை பாகுபாடு
இருந்தாலும் நட்பு என்னும்
ஒற்றை சொல்லில் இணைந்தோம் இங்கு

நட்பு என்ற உணர்வில்
 பேசி பழகி  சண்டை போட்டு
மகிழ்ந்த நினைவுகள் இங்கு

எதனை ஆண்டுகள் கடந்தாலும்
உன்னுடைய தித்திப்பு மட்டும்
இன்னும் குறையவில்லை

உன்னுடன் சேர்த்து நான்
8 ஆண்டுகள் பயணிக்கவில்லை
இருந்தும் இந்த சொற்ப காலத்தில் நீ
எனக்கு தந்த நினைவுகள் ஏராளம்

என் தனிமையின் நிறைவனாய்
என் சோகத்தின் பங்கானாய்
என் கலக்கத்தில் தெளிவனாய்
என் திறமைக்கு முகவரியும் ஆனாய்

எத்தனை வார்த்தைகள் கோர்த்து
உனக்கு வாழ்த்து சொன்னாலும்
அது போதாது

எட்டு வருடகால அல்ல
இன்னும் பல வருடங்கள்
நீ பயணிக்க என்னுடைய
வாழ்த்துக்கள்


HaPpY BiRtH DaY FTC
Title: Re: FTC எட்டாம் ஆண்டு நிறைவு - சிறப்பு கவிதை நிகழ்ச்சி
Post by: Unique Heart on July 29, 2019, 11:07:18 AM
வாழ்வில் உறவுகள் எனும் பந்தம் விலை மதிப்பில்லாதவை.

ஒவ்வொரு உயிரும் ஒவ்வொரு வழியில் தன் உறவை தேடுகின்றது.
உறவுகள் மேன்மையானது, எனவே அதை அடைவதும் அரிதானதே.

சிலர் உறவுகளை உடன்பிறப்பினால் உணருகின்றனர்,
சிலர் உள்ளதால் நேசம் கொண்டு உறவுகளை  உணர்கின்றனர்.

உலகில் ஏதோ ஒரு மூலையில் இருக்கும் நீயும், கண் கானா
தொலைவில் இருக்கும் நானும் நட்பு எனும் உடன்பிறவா
உறவாய் இணைந்தோம்.

என் தனிமையின் தவிப்பு தனில்,  உறவுகள் எனும் கடலில்,
நட்பு எனும் முத்தாய் மூழ்கி போனேன் இவ் இணையத்தில்..

மதம், மொழி, இனம், சாதி என்ற ஏற்ற தாழ்வின்றி மக்களை இந்தியன்
என்ற ஒருமைப்பாட்டினால் இணைத்த பெருமை இந்தியாவிற்கு என்ற போதிலும்.

எவ்வித பாகுபாடும், எதிர்பார்ப்பும் , ஏற்றத்தாழ்வும் இன்றி
உலக மக்கள் அனைவரையும் உறவாய் இணைத்த  பெருமை FTC க்கே..
நம்மில்  நம் உணர்வுகளை உறவாக்கியது FTC.

இன்றும் என்றும் உறவுகளை இணைக்கும் பணியை சிறப்பாகவும்,
செம்மையாகவும் செய்ய வாழ்த்தும் அன்பு நெஞ்சங்களில்
ஒருவன் --MNA...

HAPPY 8th BIRTHDAY TO FTC...
Title: Re: FTC எட்டாம் ஆண்டு நிறைவு - சிறப்பு கவிதை நிகழ்ச்சி
Post by: சிற்பி on August 01, 2019, 03:10:13 PM
எத்தனை நாடுகள்
எவ்வளவோ தொலைதூர
ஏக்கங்கள் ...
தமிழ் அன்னையின்
பிள்ளைகள் .....
உலகெங்கும் வாழும்
இதயங்கள் இவ்விடத்தில்
இணைந்தது...

அணுவின் துகள்கள்
அறிவின் திறன்கள்
இணையத்தில்
இணைந்தது மனங்கள்

கவிதை, ஓவியம்
விளையாட்டு, பாடல்
என எங்கும் எதிலும்
வாழ்கிறது என் தமிழ்

சங்கம் வைத்து
தமிழ் வளர்த்த மதுரையில்
மூவேந்தர் போற்றி வளர்த்த
தாய்மொழி

அய்யன் வள்ளுவன்
வடித்து வைத்த
பொதுமறை
அத்தனை பெருமையும்
பெற்றது என் தமிழ்

இந்த உலகின்
இணைய நண்பர்கள்
இணைந்து தந்து
இந்த இணையம் (FTC)

இங்கே தமிழில்
இணைகிறோம்
தமிழால்
இணைகிறோம்

காற்றுள்ள காலம் வரை
என் தமிழ் இருக்கும்
தமிழுள்ள காலம் வரை
இந்த உறவுகள்
வாழ்ந்திருக்கும்

எட்டு ஆண்டுகள்
கடந்த பயணம்
எத்தனை ஆண்டுகள்
ஆனாலும்
முடிவதில்லை

பேர் அறியாமல்
ஊர் அறியாமல்
உறவறியாமல்
இனைந்த இந்த இதயங்கள்
தமிழ் உள்ள காலம்
வரை வாழும்

அந்நாளில்
என் தமிழ் மொழியே
இந்த உலகை ஆளும்

இப்படிக்கு உங்களின்
புதிய நண்பன்
..... சிற்பி..
Title: Re: FTC எட்டாம் ஆண்டு நிறைவு - சிறப்பு கவிதை நிகழ்ச்சி
Post by: joker on August 01, 2019, 08:46:51 PM
விதவித கனவுகளுடன்
எல்லையில்லா பயணங்களில்
சுற்றி திரிந்திருக்கும் நமது
வாழ்க்கையின் இடையில்
அயர்ந்து ஓய்ந்து இருக்கும்
வேளைகளிலெல்லாம்
இளைப்பாற வந்து நிற்கும்
இடம் தான்
இந்த ftc அரட்டை அரங்கம்

வண்ண வண்ண சிறகுகளுடன்
பறக்கும் வண்ணத்துப்பூச்சி
கையில் அமர்ந்து செல்கையில்
விட்டு செல்லும் வண்ணம் போல
தங்கள் எண்ணங்களை
இங்கு பகிர்ந்து செல்லும்
நட்பூக்கள் உண்டு

புத்தனுக்கு கிடைத்த
போதி மரம் போல
சிலருக்கு
தன்னிலை விளங்கும்
இடமாகவும்
இருக்கிறது

செல்ல செல்ல சண்டைகள்
சின்ன சின்ன உறவுகள்
என நாளொறுபொழுதும்
பொழுதொரு வண்ணனுமாய்
தன் பயணத்தை தொடர்கிறது

பலர் வந்து போகினும்
சிலர் விழுதாய் உடனிருந்து
உன்னை தாங்குகின்றனர்

போற்றுவோர் போற்றட்டும்
தூற்றுவோர் உண்டெனில்
தூற்றெட்டும்
எட்டு திக்கிலும்
எட்டுமிடத்தில்
இணையத்துடன்
இணைந்து எங்கள்
இதயத்தில்
நீ

எட்டாம் வருடத்தில்
கால் பதித்த
உன்
வீர நடை
தொடரட்டும்
இன்னும்
பலப்பல
ஆண்டுகள்

வற்றாத ஜீவ நதியாய்
சகலருக்கும் மகிழ்வை
வழங்கி
ஓடிக்கொண்டிரு
என்றும் ...

வாழ்த்துக்களுடன்
JOKER

Title: Re: FTC எட்டாம் ஆண்டு நிறைவு - சிறப்பு கவிதை நிகழ்ச்சி
Post by: SweeTie on August 02, 2019, 07:58:49 AM
எட்டு  ஆண்டுகளை 
இனிதே  கடந்தவனே 
எல்லை இல்லா உன்  புகழை 
எடுத்தியம்ப  வார்த்தையில்லை

எட்டாத  தூரத்தில்   தெரியும்
அன்பான  இதயங்கள்  பேசும்
இதமான  சுகங்கள்  பெற 
இணைப்பு   பாலம் நீ

அன்னையின்  மடியில் பெறும் 
அன்பு பாசம்  அரவணைப்பும்   
தந்தை தரும் பாதுகாப்பும்
காண்கிறோம் உன்னிடம்.

 நிம்மதியின்றி  நித்தம்  தவிக்கும்
நிலையில்லா மனிதர் எம்மை
தத்தெடுத்து  தக்கவைக்கும்
தாயுமானவனும்  நீயே   

படைப்பாளர்கள்   பலருக்கு
களமிறங்க  வழி செய்தாய்
தொழில்நுட்பம்  தனை  விதைத்து
விற்பன்னர்  தோற்றுவித்தாய்

பாடவா பாடவா என்றழைத்து
பாடகர்களையும்    படைத்தாய்   
பட்டிமன்றம்  பல செய்து
பேச்சாளர்களை படைப்பித்தாய்

காலத்தின்  ஓட்டத்தில் 
எம்முடன் கூடவே  வளரும் நீ
எட்டாண்டு  அடைந்துவிட்டாய்
ஆல்போல் தழைத்து  அறுகுபோல் வேரூன்றி
நீண்ட நல்வாழ்வு  பெற வாழ்த்துகிறேன்

இனிய பிறந்தநாள்  வாழ்த்துக்கள் 
வாழ்க பல்லாண்டு. 


 
Title: Re: FTC எட்டாம் ஆண்டு நிறைவு - சிறப்பு கவிதை நிகழ்ச்சி
Post by: RishiKa on August 02, 2019, 03:43:48 PM


FTC  நம் பிறந்த வீடு !
நாம்   இங்கு புதியதாய் பிறந்தோம்   !
அனைவராலும்   கொண்டாடி ..
ஆரோக்கியமாய்  வளர்கிறோம் !
அதனால் நம்  பிறந்த வீடு !

FTC  நம்  புகுந்த வீடு !
புகுந்த வீடு உறவுகளாய்...
புகைந்து போன பிரிவுகளாய்..
மகிழ்ச்சியும் கோபமுமாய் ..
புது  புது வரவுகள் ..
அதனால் புகுந்த வீடு !

FTC  நம்  பள்ளி !
புதுமுகமாய் வருகை தந்த என்னை
எனையே எனக்கு அறிமுகப்படுத்தி ....
நிறைய  பாடங்களும் தேர்வுகளும்..
தீர்வுகளும்  கொடுத்ததால் ...

FTC  நம்  ஆசான் !
நிறைய குருமார்கள் !
நிறைந்த வாழ்கை தத்துவ பாடங்கள் !
நமக்கு போதித்தும் ...
சாதிக்கவும் வைத்ததினால் !

FTC  நம் காதலன் !
அன்பு பெருகி ஆறாக ஓடி
விலகி ஓடினாலும் திரும்ப வர வைக்கும் ..
பிரியாத பிரியங்களை கொடுப்பதினால் !

FTC  நம் ஆருயிர் தோழி !
உள்ளத்து உணர்வுகளை ..
ஆசையாய்  ... அன்பாய்  ...
கோபமோ தாபமோ ...
சிரிப்போ  எரிச்சலோ ..
சோகமோ கவலையோ ..
எதுவாயுனும் பகிர்ந்து கொள்வதால் ! 

FTC நம்  சரணாலயம் !
வெவ்வேறு நாட்டு மனிதர்களையும்
கலாச்சாரங்களையும் கலைகளையும்
இணைத்து நேசத்தோடு ...   
அடைக்கலம் கொடுத்து காப்பதால்  ...

FTC  நீ எங்கள் வாழ்வின் ஓர் அங்கம் !
எட்டு ஆண்டில் அடியெடுத்து வைத்து
ஏணி படிகளாய் எங்களை உயர்த்தி
எல்லாரையும் மகிழ வைத்த நீ ..
பல்லாண்டு செழித்து உன் பணி..
என்றும் தொடர வாழ்த்துகின்றோம் !
 
Title: Re: FTC எட்டாம் ஆண்டு நிறைவு - சிறப்பு கவிதை நிகழ்ச்சி
Post by: BreeZe on August 02, 2019, 11:57:48 PM


என்னைக்கும் போல
இன்னைக்கும் sunday நா
தூக்கம்னுதான் இருந்தேன்


போரடிச்ச நேரம்
ஞான பழத்துக்கு
சுத்தின பிள்ளையார்போல
சாட் சாட்டா சுத்தி
ஏழு கிரகம் கூட
இம்புட்டு சுத்திருக்காது
அம்புட்டு சுத்திருக்கேன்
நான்

எந்த சாட்டும் நல்லா இல்லனு
கடைசியா சுத்திவந்து "En Giragam"!
நின்ன இடம் இந்த ftc

பாசக்கார புள்ளைங்க
என்கூட நல்லா பேசினாங்க
இதான் நம்ம தேடின சாட்னு
கமுக்கமா ஓட்டிகிட்டேன்
4 வருஷம் ஓடிடிச்சி

நல்ல நல்ல நண்பர்கள
கொடுத்திச்சி ftc
எப்படி நான் பேசினாலும்
அன்பா பாத்துகிட்ட
உங்க
எல்லாருக்கும்
என் நன்றி

இன்னும்
நெறய
வருஷம்
ftc பிறந்த நாள்
கொண்டாடணும்னு
வேண்டிக்கறேன்


Copyright by
BreeZe
Title: Re: FTC எட்டாம் ஆண்டு நிறைவு - சிறப்பு கவிதை நிகழ்ச்சி
Post by: சாக்ரடீஸ் on August 03, 2019, 10:00:00 PM
கவிதைகள்
பல தவழ்ந்தாலும்
ஆயிரம் ஆயிரம்
நினைவுகள் ஓடும்
ஒரு அழகான அகழாய்வே இது
உனக்காக உன்
பிறந்த நாளுக்கு நான்  எழுதும்
வாழ்த்துமடல்....

விழி  மூடி
பின் நோக்கி செல்கிறேன்...
காதோரம் பலரின் சிரிப்பொலி..
எத்தனை இன்பம்
கசிந்திருக்கும்  உயிரோடு 
சிதைந்து போகிறேன்....
காற்றோடு கலந்துபோகிறேன்...
நல்ல நினைவுகளை தந்த உனக்கு
நன்றிகள் பல..

இங்கு
பலரின் மனஅழுத்தத்தை
கரைப்பதில்
நீ ஒரு உயிர் தோழன்...!

இங்கு
பலரின் தனித்திறமையை
வளர்ப்பதில்
நீ ஒரு அறிவாலயம்..!

இங்கு
பலருக்கு முகமறியா நல்ல நட்பை
கொடுப்பதில்
நீ ஒரு சமுத்திரம்...!

உள்ளங்களுக்கும் உணர்வுகளுக்கும்
மதிப்புக்கொடுத்து
நட்புகளை உயிர்ப்பித்து
துரோகிகளை மன்னித்து
திறமைக்கும் திறமைசாலிக்கும்
களம் அமைத்து...
சாதி,மதம்,ஏழை,பணக்காரன்,கருப்பு,வெள்ளை
போன்ற எந்த வேறுபாடும் இல்லாமல்
தமிழ் என்ற ஒற்றை மையப்புள்ளியில்
கட்டிப்போடும்...
உன் ஆளுமையை வர்ணிக்க வார்த்தைகள் உண்டோ

ஒவ்வொரு நண்பர்களின் பிறந்தநாளையும்
சிறப்பாக கொண்டாடும் உனக்கு
இன்று பிறந்தநாள்...
எத்தனை இன்னல்கள்...
எத்தனை துரோகங்கள்...
இதை எல்லாம் தகர்த்து எறிந்து

வெற்றிநடை போடும்...
உன் கம்பீரநடை பலஆண்டுகள் கடந்தும்
தொடரவேண்டும் என்று வாழ்த்துகிறேன்....

இனிய இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்.....
Title: Re: FTC எட்டாம் ஆண்டு நிறைவு - சிறப்பு கவிதை நிகழ்ச்சி
Post by: JasHaa on August 04, 2019, 01:57:53 PM
தென்றல்  தழுவும்  நந்தவன  தோட்டம் 
ஆயிரமாயிரம் பல்லாண்டு  தாவரம் 
அதனுள்,
தனித்துமாய் ஓங்கி  உயர்ந்த தாவர கிளைகள்  நீ !
மன்னாரிலும்  எல்லாம் மாமன்னன் 
ஆலமர விருட்சமாய் 
பண்பலையாய், பொதுமன்றமாய்,
அரட்டை   அரங்கமாய்
உன்,
புதுமைகள் தொடரட்டும் 
பூமகள்  பூக்கட்டும்

கடந்து வந்த பாதைகளில்  ஆயிரமாயிரம்  தோழமைகள் 
பொதுமன்றம் எனக்கு புதிதல்ல 
ஆயினும் நண்பர்கள் பொதுமன்றம் புதுவிதம் 
புதுமைகளின் அர்த்தம் என்ன?
என்ன அனைவரும்  தமிழ் அகராதி  தேடி  ஓடுகிறீர்களா  ?
அதற்கு நண்பர்கள் பொதுமன்றமே  சாட்சி ..

வாழ்த்துமடல்  எழுத  முடியுமோ  என்னமோ 
ஆனால், மனம்  நிறைத்த  அன்புடன்
அன்பு குழுமத்தில் 
இணைந்த  அன்புபறவையாய்  நான் !
இனிய  பிறந்த நாள்  வாழ்த்துக்கள்