FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: இளஞ்செழியன் on July 22, 2019, 02:07:45 PM
-
நீ செய்வதையெல்லாம் நான்
சுட்டிக்காட்டி ரசிப்பதைப் போலவோ..!!
நான் செய்வதையெல்லாம் நீ
குத்திக் காட்டி ஏசுவதைப் போலவோ..!!
எப்படியெல்லாம் நானுன்னிடம்
இருக்க வேண்டுமென்றும்..!!
நீ செல்லுமிடமெல்லாம் பயணிக்கும்
நிழலான பிம்பம்போலவோ..!!
நீ செல்லாத இடங்களிலும் செல்லும்
உன் வாசனைப் போலவோ..!!
எப்படியெல்லாம் நானுன்னைத்
தொடர வேண்டுமென்றும்..!!
என் நாயைக் கட்டிப் போட்டுக் காவல்
காக்க விட்டிருப்பதைப் போலவோ..!!
உன் பூனையை சுற்றித் திரிந்து
வந்ததும் சோறூட்டுவதைப் போலவோ..!!
எப்படியெல்லாம் நான் உன்
செல்லமாய் இருக்க வேண்டுமென்றும்..!!
ஓய்வெடுத்துக் கொண்டேயிருக்கும்
முதியவரின் நாற்காலி போலவோ..!!
உழைத்துக் கொண்டேயிருக்கும்
உன் அலைபேசியைப் போலவோ..!!
எப்படியெல்லாம் நான் உன் அருகே
கிடந்திருக்க வேண்டுமென்றும்..!!
எப்போதும் சேர்ந்தேயிருக்கும் மேல்
வீட்டின் தாழ்ப்பாழைப் போலவோ..!!
எப்படியாவது சேர்ந்து விடத் துடிக்கும்
கீழ் வீட்டு சாளரம் போலவோ..!!
எப்படியெல்லாம் உன்னுடைய
சேர்ந்திருப்பு அமைய வேண்டுமென்றும்..!!
எல்லா ஒளிக்கும் ஒளியூட்டும்
ஓர் கதிரவனாகவோ..!!
ஒட்டுமொத்த இருளின்
ஒற்றைச் சுடர் சந்திரனாகவோ..!!
எப்படி உன் வாழ்வில் நான்
கரைகடக்க வேண்டுமென்றும்..!!
தெள்ளிய முறையில் நானறிந்ததெல்லாம்
தெளிவானதாகத் தெரியவில்லை..!!
நீ செய்வதை விட சிறப்பாக செய்திட.
கற்றுக் கொடேன் ...
நேசித்துக் கிடப்பது எப்படியென்று..!!
தெரியவில்லை என்றாலும்..!!
நானுன்னைக் நேசிப்பதே_நிஜம்...
-
Wow machan semma. Yaar andha myna.
Enkitta sollaliyema nee...
-
Briyani thaan 😂😂 naam feel aahurathu athuku maddunthan
-
enakku biriyani machiiii :-* :-*