FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: இளஞ்செழியன் on July 21, 2019, 10:31:35 PM

Title: வாழ்க்கை பாடம்
Post by: இளஞ்செழியன் on July 21, 2019, 10:31:35 PM
     

வருபவர்கள் யாவரும்
தன்னந்தனியாக விட்டுப்போவதாக
புலம்பிக்கொண்டே இருக்கிறாய்,
இல்லை.
அவர்கள்
ஒவ்வொரு படியாக
ஒவ்வொரு புரிதலாக
ஒவ்வொரு மனத்திடமாக
கைத்தூக்கிவிட்டுப் போகிறார்கள்.
வந்தவேலை முடிந்தவர்களை
தங்கியிருக்கச் சொல்லுதல் அபத்தம்.
வழியனுப்பி வை!   
Title: Re: வாழ்க்கை பாடம்
Post by: Unique Heart on July 21, 2019, 10:47:55 PM
மச்சான்  செம்ம .  வரிகள்  வலியென்ற போதும்
உண்மையானது.   
வாழ்த்துக்கள் மச்சான்  உங்கள் கவிப்பயணம்
தொடரட்டும்.. 💐💐💐💐
Title: Re: வாழ்க்கை பாடம்
Post by: Guest 2k on July 21, 2019, 11:52:52 PM
வழியனுப்பி வைப்பதை தவிர சிறந்த அன்பு வேறொன்றுமில்லை. அருமை செழியன்