FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: RishiKa on July 19, 2019, 07:47:34 PM
-
நோயுடன் படுக்கையில் கிடக்கையில் ...
தொடரும் நினைவுகளின் ஊர்வலம் !
மருத்துவமனையின் நுழைவு சீட்டு
எண்ணங்களின் அழைப்பு வரிசை !
இதய துடிப்புகளின் அலைவரிசையில் ...
வரைபடத்தில் காணமுடியாது
இதயத்தின் வலிகளை ....
வேதனைகலின் அழுத்தங்களை காண இயலுமா
ரத்த அழுத்தத்தின் சோதனையில் ...
பரிசோதனைக்கு ரத்தத்தை உறிஞ்சுகையில்
துக்கங்களையும் உறிந்து எடுத்து விட்டால் ...
எவ்வளவு நன்றாக இருக்கும் ?
வெறித்த பார்வையில் படும்
ஜன்னலில் சதுரமாய் தெரியும் .
வானமும் சில மேகதுண்டுகளும் ...
எங்கோ அலை அலையாய் ...
யாருக்கோ சேதி சொல்வது போல ..
பின்பு ...
சொல்ல வந்ததை சொல்ல முடியாமல்
கலைவதை போல ...
மருந்துகளும் மாத்திரைகளும் ..
மயக்கத்தில் ஆழ்த்துவது ...
புதையுண்ட பொக்கிஷத்தை ..
தோண்டி எடுப்பதை போல ...
நெஞ்சம் மறப்பதில்லை ..
அதன் நினைவுகள் இழப்பதில்லை ..!
-
rishu babe nice kavithai :-* ...babe ellame marum. kavalai venam .idhaiyee yosichutu irukkamaa life aadutha paadi nogiii poite irukka ;D edhir parathaa santhosamana life unga life a iruku babe :-* happy a irukka :-*
-
Teacher. Superb kavidhai. எல்லாம் சரியாகும் இதுவும் கடந்து போகும் ...
வாழ்வில் மாற்றம் என்ற ஒன்று தான் மாறாதது.
-
மௌனம் ஆயிரம் வார்த்தைகளுக்கு சமம் வார்த்தைகளோ அந்த மௌனங்களின் சமர்ப்பணம் பேசுவதால் உறவுகள் வாழ்வதில்லை பேசாத உறவுகள் பிரிவதில்லை புரிதல்களில் தான் உள்ளது நம் உறவின் எல்லை
அன்பே புரிந்து சொல் நம்மையும் நம்மைச் சுற்றி இருக்கும் அன்பையும்
-
இதுவும் கடந்து போகத் தானே வேண்டும் ரிஷூ பேபி. Cheer up baby, all is well. You will be alright soon