FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Unique Heart on July 17, 2019, 01:56:57 PM
-
வாழ்க்கை. ஒவ்வொருவரிடமும் ஒரு கேள்வி கேட்க்கும்,
அக்கேள்விக்கான பதிலை தேட ஒவ்வொருவரும் முயற்சி செய்கின்றனர்.
கேள்விக்கான பதிலை தேடும் வழியில், சிலர் உறவுகளை இழக்க நேரிடும்,
சிலர் உடைமைகளை இழக்க நேரிடும்.
இப்படி கேள்விக்கான பதிலை ஒவ்வொருவரும் ஒவ்வொரு வித தியாகங்களை
செய்து ஒவ்வொரு வழியில் பதிலை தேடி அலைந்து ஒரு வழியாக பதில் கிடைத்தது
என்ற மன நிம்மதியுடன் தன் வாழ்க்கை எனும் ஆசிரியரை சந்திக்க சென்றால்.
வாழ்க்கை தன் கேள்வியை மாற்றி இருக்கும்...
இதுதான் மனித வாழ்க்கை. எனவே மக்களே வாழ்வில் அதிகமான முயற்சி செய்யுங்கள்
கேல்விக்கான பதிலை தேட அல்ல,
மாறாக வாழ்க்கை நமக்கு கற்பிக்கும் பாடத்தை அறிந்து கொள்ள...... MNA.....
-
மச்சி அருமை....
நாகரிகத்தை பதில்களில் எதிர்பார்க்காமல்
கேள்விகளில் கடைபிடியுங்கள்
உறவுகளும் நீடிக்கும்,வாழ்க்கையும் ஆழகாகும்...
வாழ்🥰🥰
-
நன்றி என் அருமை மச்சானே 💐💐💐
-
கேள்விகளற்ற வாழ்வு சுவாரசியமற்றது. கேள்விகளை எதிர்கொள்ள வேண்டிய கட்டாயங்களில் வாழ்கின்றோம். சிலர் பதில் தேடி வென்று வருகின்றனர். சிலர் மீள முடியாமல் அமிழ்கின்றனர். அருமையான கருத்தை பிரதிபலிக்கிறது கவிதை யுனிக்