FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: supernatural on March 31, 2012, 02:30:38 PM
-
கதிரவனின் கோபம்...
சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கம்..
பகலவனின் வஞ்சம் தணிந்ததோ...???
பாலைவனத்தில்...பனித்துளி போல...
வெப்பத்தை தணிக்க....
கார்மேகங்கள் சூழ்ந்து...
பூமிக்கு அனுப்பியது...
இதமான சில துளிகள்...
மழை துளிகள்...
-
துளி துளியாய் கொட்டும்
மழைத்துளியை பற்றி
துளி துளியாய் சொட்டும்
தமிழ்த்துளியை ஒற்றி
வரி பதித்திருக்கின்றார் ஒரு
அரைத்தமிழ் (பெண் ) குட்டி - அவர்
வரிகள் படைப்பதில் படுசுட்டி
ஒரு வேலை " சிறப்பியர்க்கை "
என்பதால் தானோ ?
இயற்கையை பற்றி அவர்
வரிகள் அனைத்தும் படு கெட்டி !
-
பெரும் கவியின்...
அரும் தமிழில்...
தங்களுக்கே உரிய...
அழகிய நடையில்...
என் கிறுக்கல்களுக்கு..
தங்கள் பாராட்டுகள் ..
அருமை.....
நன்றி...!!!!
-
arumaiyana kavithai nature friend
-
தங்கள் பாராட்டுக்கு..
மனமார்ந்த நன்றிகள்..!!!
-
நீ கூறிய நன்றியினை
நன்றியாய் அன்றி
தங்கு தடை ஏதும் இன்றி
இனிமைகுறை ஏதும் இன்றி
உன் அழகு தமிழோடு ஒன்றி
இச்சையூட்டும் உச்சரிப்பை ஊன்றி
தொடர்ந்து வரிகளாய் பதி
நன்றிக்கு மாற்றாய்
அது போதும் எனக்கு ....