FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Unique Heart on July 13, 2019, 04:47:02 PM
-
பாசம் என்ற வலையினால் பறந்து விரிந்து நிற்கும் நீல வானம்.
தன் சேயை தாலாட்டி தாங்கி பிடிக்கும் தாயை போலான பூமி தாய்..
சலங்கை அணிந்தோடும் பெண்ணை போன்று நாணத்தில்
துள்ளி குதித்தோடும் நீரோட்டம்.
மணாளனை காண வெட்கம் கொள்ளும் மங்கையை போல,
சூரியனை காண வெட்கம் கொள்ளும் சந்திரன்.
காதோரம் இனிக்கும் குயிலின் கூவல்.
நாணத்துடன் உரசிப்போகும் பூங்காற்று.
எவ்வித கவலையும் இன்றி புன்னகைத்து பூத்து குலுங்கும் மலர்கள்.
தாலாட்டின்றி உறங்க வைக்கும் இரவு நேரம்.
மனம் மயங்கும் மாலை வேலை.
வானிற்கும், பூமிக்கும் உண்டான உறவை மெய்ப்பிக்கும்
மழையின் வருகை.
மழையின் வருகையை என்னி தலை சாய்க்குக்கும் செங்கதிரின் சாயல்..
உலகில் படைக்க படைக்க பெற்ற ஒவ்வொரு உயிருக்கும் யேற்றார் போலான
உணவுகளும் உறவுகளும்.
இன்னும் என் நினைவில் இல்லாது ஏராளமான அற்புதங்கள்.
இறைவா உன் படைப்புகளை வர்ணிக்க வார்த்தைகள் இல்லை.
புகழ் அனைத்தும் உன்னையே சேரட்டும்..
MNA.....