FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: இளஞ்செழியன் on July 10, 2019, 02:15:52 AM
-
உன் கூந்தல் போர்த்தி உறங்கும்
இரவொன்றில் விழித்துக்கொள்கிறது காதல்.
முத்தங்கள் சொல்ல முடியாத ப்ரியங்களை
கண்ணீர் வழியும் பிரார்த்தனைகளோடு தாங்கி நீள்கிறது.
உன் கன்னக்கதுப்புகளில் ஊற்றாகி
சொட்டுச்சொட்டாய் மனம் நிறைத்து பின்
நுரைத்து ததும்புகிறது அன்பின் பெருநதி
நெஞ்சுக்கூட்டின் குளிராகி தொடர்கிறது
நேசத்தின் ஈரம்
"அழுகையா வருது" எனச் சொல்கையில்
அன்பின் வெளிப்பாடாகிறாய்.
இப்போது பிரபஞ்சத்தை
ஒளி தழுவத்துவங்குகிறது..
-
:) woww eppadi ellam varnikkuringaa :) sema semaa