FTC Forum
Entertainment => Love & Love Only => Topic started by: RemO on March 31, 2012, 11:18:14 AM
-
ஒவ்வொரு பெண்ணுக்கும் ஒவ்வொருவிதமான ரசனை உண்டு. ஆணிடம் பெண்ணிற்கு எந்த விசயங்களை பிடிக்கும் என்று கேட்டால் பலரும் பலவித கருத்துக்களை கூறுவார். சிலருக்கு சிரிப்பு, சிலருக்கு பேச்சு என தங்களைக் கவர்ந்த அம்சங்களை கூறுவார்கள். ஆண்களின் கவர்ச்சியாக பெண்கள் எதை நினைக்கிறார்கள், அவர்களை கவர்வது எது, அவர்கள் எதிர்பார்ப்புகள் என்ன என ஆராய்ந்து இங்கே வழங்கியுள்ளனர் நிபுணர்கள். படித்து தெரிந்து கொள்ளுங்களேன்.
புத்திசாலித்தனம்
புத்திசாலியான ஆண்களை பெரும்பாலான பெண்களுக்கு பிடிக்கிறதாம். பேச்சில் மட்டுமல்ல காதல் தருணங்களிலும் புத்திசாலித்தனமாக நடந்து கொள்ளும் ஆண்களைத்தான் பெண்கள் விரும்புகின்றனராம். ஆபத்தான தருணங்களில் புத்திசாலித்தனமாக முடிவெடுக்கும் ஆண்கள் அதிகம் பெண்களை கவர்கின்றனர் என்கின்றனர் நிபுணர்கள்.
கம்பீரமான குரல்
ஆண்களின் கம்பீரமான குரல் பெரும்பாலான பெண்களை கவர்கிறதாம். கம்பீரமான குரலை உடைய ஆண்கள் தங்கள் பணியில் முதன்மையானவர்களாகவும், ஆளுமைத்திறன் கொண்டவர்களாகவும் திகழ்வார்கள் என்பது பெண்களின் கருத்து.
மீசைக்கு முக்கியத்துவம்
ஒரு ஆணின் வசீகரம் அவனின் நிறத்தில் அல்ல என்பதே பெரும்பாலான பெண்களின் கருத்து. ஆண் சிவப்பாக இருக்க வேண்டும் என நல்ல நிறமுடைய பெண்கள் கூட எதிர் பார்ப்பதில்லை. ஆணின் நிறத்திற்கு முக்கிய த்துவம் கொடுக்காத பெண்கள் கூட, அவர்கள் ‘மீசை’க்கு முக்கி யத்துவம் கொடுக்கிறார்கள். ‘மீசை’ ஒரு ணுக்கு அழகு, கம்பீரம் என்பது அவர்கள் கருத்து. மீசையை பிடிக்கும் பல பெண்களுக்கு ஏனோ ‘ தாடி’ பிடிப்பதில்லை. தாடி ஒரு ஆணை சோகமாகவும், நோய் வாய் பட்டது போலவும் தோற்ற மளிக்க செய்கிறதே அதற்கு காரணம்.
கவர்ச்சிகரமான தோற்றம்
கவர்ச்சியான தோற்றம் கொண்ட ஆண்களை பெரும்பாலான பெண்கள் விரும்புகின்றனராம். அழகான உடை அலங்காரம். அழகான ஹேர் ஸ்டைல் போன்றவை பெரும்பாலான பெண்களை கவர்கிறதாம்.
ரொமான்ஸ் செயல்கள்
அதிக ஆடம்பரமில்லாத ரொமான்ஸ் செயல்பாடுகள் பெண்களுக்கு பிடிக்கிறதாம். வெளிப்படையான, அதே சமயம் யாருக்கும் பாதிப்பில்லாத ரொமான்ஸ் செயல்களில் ஈடுபடும் ஆணின் கையை பிடித்துக்கொண்டு இவன் என்னுடையவன் என கூறுவதை பெண்கள் விரும்புகின்றனராம்.
பெண்களின் எதிர்பார்ப்புகளும் , ஆசைகளும் பெண்ணுக்கு பெண் வேறுபடும் என்றும் நிபுணர்கள் கூறியுள்ளனர்.
வசதியான வாழ்க்கை
வங்கியில் அதிக பணம், அழகான வீடு, கார் என வசதி படைத்த ஆண்களை சில பெண்களுக்கு பிடித்துள்ளது. மனதுக்கு பிடித்த ஆணோடு மகிழ்ச்சியாக ஒரு பயணம் செய்வதை அவர்கள் விரும்புகின்றனராம்.