FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Unique Heart on July 06, 2019, 08:49:15 PM

Title: 💕 என் அவளுக்கான கடிதம்.. 💕
Post by: Unique Heart on July 06, 2019, 08:49:15 PM
என்னவளே ! 
என்னுள் உன்னை பற்றியதான தொடர்பு என்பது,
என் தாயிற்கும் எனக்குமான பாசத்திற்கு ஒப்பானது.

உன்னில்  என் நினைவுகள்  இல்லை  என்ற போதும்
என்னுள்  உன்னை பற்றிய நினைவுகள் நிறைந்து மட்டுமல்ல
நிரந்தரமாகவும் நிலைத்து விட்டது.

என்னுள்  உன்னிடமான பிரிவு  எனக்கு வலிக்கும் என
தெரிந்தும் விலகி நின்றேன்,  காரணம் உன்னுள் என்னை 
பற்றிய நினைவுகள் வருத்தத்தை தருமோ என்ற அச்சத்தினால்.

உயிரே  ! என்னுள்  உன்நினைவை மறக்க நினைப்பதிலும் தோட்றேன்,
என் இதயமும் என்னை வஞ்சிக்கிறது, உன்னை  பற்றிய  நினைவுகளை
நினைப்பதினால்.....

நிழல் என்று தெரிந்தும் நேசித்தேன், நிழல் அது நிஜமாகும் என்றல்ல,
நினைவுகளாவது மிஞ்சட்டும் என்று....

என்றும் உன்னை நினைக்க  மறவா உறவாளன் MNA.....