FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: RishiKa on July 03, 2019, 11:20:47 AM

Title: அன்பின் சிறைகள் !
Post by: RishiKa on July 03, 2019, 11:20:47 AM

நீண்டதொரு மௌனத்திற்கு பின்
பேசும் வார்த்தைகளுக்காக...
காத்து இருப்பது தவம் !
சிவமும் சவமுமாய் வாழ்க்கை போகையில்
சாம்பலின் வாசத்தில் ..
உணர்வுகளின் ஊர்வலம் !

அந்தரத்தில் தொங்கும் கிரகங்கள் ...
எந்திரத்தில் சிக்கும் மனிதர்கள் !
இரண்டுக்கும் வித்தியாயசம் இல்லை !
காற்றடித்தால் நகரும் ...
மேகக்கூட்டங்கலாய்  உறவுகள் !

வான்வெளியை கடக்கும் ...
பறவைகளுக்கு  தெரிவதில்லை ..
மண்ணில் போராடி கொண்டு இருக்கும் ...
மனிதர்களின் ஓட்டம் !

புறக்கணிப்புகளும் புதிது அல்ல
புலன்கள் அறிவதில்லை...
புதிய பார்வைகளின்..
பரிமாணங்களை !
எதிர் பார்ப்பு இன்றி வாழ
மனிதன் எந்திரம்  அல்லவே !

Title: Re: அன்பின் சிறைகள் !
Post by: சிற்பி on July 13, 2019, 05:23:22 AM
Super
Title: Re: அன்பின் சிறைகள் !
Post by: Guest 2k on July 21, 2019, 06:16:52 PM
எதிர்பார்ப்பின்றி வாழ மனிதன் எந்திரம் இல்லையே  :(
Title: Re: அன்பின் சிறைகள் !
Post by: Unique Heart on July 23, 2019, 06:53:13 PM
நீண்டதொரு மௌனத்திற்கு பின்
பேசும் வார்த்தைகளுக்காக...
காத்து இருப்பது தவம் !

உண்மையான வரிகள் மா வாழ்த்துக்கள்  செம்ம 👌👌👌