FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: இளஞ்செழியன் on June 30, 2019, 06:11:24 PM
-
சேலை அணிவதை பிரத்தியேகக்
கலையாகக் கற்று வைத்திருக்கும்
பெண்ணைக் காதலியாகப் பெற்றவர்
ரசனைக்குரியவராகவோ, ராசியானவராகவோ இருக்கலாம்
அவர்களையே மனைவியாக அமையப் பெற்ற
பாக்கியசாலிகள் வரிசையில் வருவதற்காக தான்
நானும் காத்திருக்கிறேன்..!!
பின்னே ஜன்னலில்லாமல்
சின்னச் சின்ன கற்களை வைத்து
அழகு சேர்க்க நினைத்து நாசமாக்காமல்
ஓர் நூலளவு காற்று விளையாட இடம் தந்து
இசைந்து கொடுக்கும் படி ஜாக்கெட்டுகளை
அமைத்தல் எவ்வளவு சௌகரியமான கவர்ச்சி என்று தெரியுமா..!!
அருவியின் பாறை விளிம்பில்
நீர்ப் பட்டு நேர்க் கோட்டில் விழுவதைப் போலும்
அஸ்தமிக்கும் சூரியனின் சீரும் கதிர்கள்
செவ்வானத்தை அழகு சேர்க்கும் போலும்
கொசுவங்களை அமைத்துக் கோர்வையாய்
உடுத்தி வரும் அழகிகளை அதிகமாக
கல்லூரிப் பணியிடங்களில் பார்க்கலாம்
சில நேரம் பயிற்சி ஆசிரியர்களாகக் கூட..!!
மேனி முழு மூச்சாக மறைத்து
கீழ்க் கழுத்து வரை மூடி நடப்பவர்கள்
ரசிக்க வைப்பார்கள் அதிலும் முந்தானையையே
எடுத்து முக்காடு போடுவதெல்லாம்
பொன்னே தனக்குத் தங்க முலாம் பூசுவதைப்
போன்ற அத்தனை அழகானவை..!!
எப்போதோ ஓர் கணக்கெடுப்பில்
உலகின் நாகரீகமற்ற உடைகளின் வரிசையில்
சேலை வந்திருப்பதாகப் படித்த நியாபகம்
சேலை என்பது அதற்கான வடிவமைப்பில்
அப்போதிருந்து உடுத்தியிருப்பது
சில மாறுதல்களை ஏற்படுத்தி நாம்தான்
அதற்கான பெயரைக் கெடுத்துள்ளோம்.
பாவடை தாவணியையெல்லாம்
சேலைத் தூக்கித் தின்று விடும் என்று
அதன் விரும்பிகளுக்கே தெரியும்
நான் வெறுப்பதென்னவோ ஜன்னல் வைத்த
ஜாக்கெட்டுகளைத் தான்
சேலையெனும் விசிறியையே உடுத்திக்
கொண்டு ஜன்னலில் என்ன தென்றலா அடிக்கப் போகிறது..!!
(https://i.postimg.cc/k6rG6bDm/250px-Devadasi-1920s.jpg) (https://postimg.cc/k6rG6bDm)
-
நல்ல பதிவு.
உண்மையாவே சேலை தான் உடைகளில் சிறந்தது... அத அநாகரீகமா மாத்தினது நம்ம மக்கள் தான்.