FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: aasaiajiith on March 31, 2012, 10:52:25 AM
-
எல்லோரும் கண்டு எல்லையில்லா இன்பம் கொள்ளும் எழில் நிறைந்த
எல்லோரா சிற்பங்கள் போல் சிறந்த சிற்ப கவிதைகள்
மல்லிகை , மௌவ்வல் ,மரிக்கொழுந்து என மலர்களே
கொஞ்சி களிக்கும் மலர் கவிதைகள்
அஜந்தா ஓவியங்களே அசந்து "ஒ " வென வாய்திறகவைக்க
கூடிய ஓவிய கவிதைகள்
மேகம் மேலிருந்து பூமிக்கு காதல் தூதாய்
அனுப்பும் மழை கவிதைகள் .
மண்ணோர்,முன்னோர்,மட்டுமின்றி,விண்ணோர்
மயங்கும்,மழலை கவிதைகள்
மனம் (வாசம்) மணக்கும் மனம் அதன் மனமே
மயங்கும் மனகவிதைகள்
நல்ல மனம் ,வெள்ளை மனம் ,பிள்ளை மனம்,படைத்தவரின்
மனம் மகிழும் மன கவிதைகள்
சொக்க சொக்க சொக்கி இருக்கும்,சொல்லும் போதே
சொக்க வைக்கும் சொற் கவிதைகள்
சொர்க்கம் அதை சொற்பம் ஆக்கும் சொர்கமே
அதை பக்கம் சேர்க்கும் சொர்க கவிதைகள்
ஒரு காலத்தில் உனக்கும்,ஏன் எனக்கும் கூட
மிக சொந்தமாய் இருந்த சோக கவிதைகள்
மாலை வேலை சாலை முழுதும் வரிகள்
இரைந்து நிறைந்து இருக்கும் சோலை கவிதைகள்
இப்படி, உள்ளூர் கவிதைகள் உலக கவிதைகள் வரிசையில்,சீர் வரிசைகளோடு கிடக்க
அக்கவிதைகளை கடந்துவிட முடியாமல் கடைசியாய் காத்துகிடக்கும்
இந்த கத்து குட்டி கவிஞனின் சொத்தை கவிதைகளும்
கவிதை படிக்கும் எல்லோர் மனதையும் உலுக்கி ,
சமயத்தில் உருக்கிட செய்யும் "உயிர் கவிதை"யே
உன் உன்னதமான நேசம் பெற
உச்சி வெய்யிலை பொருட்படுத்தாமல் ஒட்டுமொத்த
கவிதைகள் காத்திருக்க
உயிர் கவிதையே !
கவிதைக்கான உன் உன்னத காதலை நீயே உரைத்து
ஏற்க்கனவே உயர்வாய் இருக்கும் உன்
உயர்வை உச்சபட்சம் ஏற்றிவைக்கின்றாய்
மணி மகுடமாய் !
-
ahahaaaaa kavignare really super engu kavithai eluthum anaivaraium intha kavithaikul adaki vitir avargal ethai patri ellam eluthukiragal endru ellam azhaga soli irukirigal mani magudam ungaluke arumaiyana vari samaithu eluthi irukirigal illai illai kavithai theeti irukirkal enagali pol kathu kutty kavignare kum kavithai eluthiyathuku nandri