FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: RishiKa on June 22, 2019, 11:31:58 AM

Title: தாய்க்கு ஒரு வாழ்த்து!
Post by: RishiKa on June 22, 2019, 11:31:58 AM

என் பிறப்புக்கு  பெருமை சேர்த்த 
என் தாயே ! உனக்கு என் பிறந்த நாள் வாழ்த்து !

வாழ்க்கையை சிலர் ..
வரமாக பெற்று இங்கு வாழ  வருவர் !
சிலரோ ...
தவம் இயற்ற வருவர் !...
நீ தவம் புரிய வந்தவள் !
தவத்தின் பலனை எல்லாம்
எங்களுக்கு அளித்த தேவதை நீ !

இந்த உலக வேள்வி தீயில் ....
உனையே  புடம் போட்டு ஜொலிப்பவள் நீ ! !
எந்த  ஏமாற்றங்களும் ...
துரோகங்களும்  உன்னிடம் ...
மண்டியிட்டு வணங்கி செல்லும் !

எங்கள் நல்வாழ்வே உன் உயிர் மூச்சு !
எங்கள் வளர்ச்சியே உன் குறிக்கோள்  !
நாங்கள் உனக்கு பெருமை சேர்த்ததுண்டு சில காலம் !
ஆனால் ...
உன் பிள்ளைகளாய் வாழ்வதில் தான் ..
எங்களுக்கு பெருமை ...

ஆல மரமாய் நீ படர்ந்து இருக்க ....
உன் நிழலில் கூடு கட்டி வாழும் ...
பறவை கூட்டங்களை நாங்கள் !
இன்னும் எத்தனை பேரிடர் வந்தாலும்
எங்களை காக்கும் தெய்வமாய் நீ ...

எத்தனை வயதானால் என்ன ?
உன் குழந்தையாய் வாழ்வதில் ..
பெருமை தான் எனக்கு ...
உன் காலடியில் வணங்குகிறோம் ...
இன்னும் பல்லாண்டு காலம் வாழ்ந்து ...
என்றும் உன் கருணை மலர்களால் ...
ஆசிர்வதித்து ...உன் அன்பு கரம் கொண்டு
என்றும்  காப்பாய் நீ !



(https://i.postimg.cc/D0pg2b81/th.jpg) (https://postimages.org/) (https://treetop100babynames.com/exotic-baby-names-boys)
Title: Re: தாய்க்கு ஒரு வாழ்த்து!
Post by: DoRa on June 22, 2019, 09:12:07 PM

(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fdl2.glitter-graphics.net%2Fpub%2F2185%2F2185422ax81zthmlv.gif&hash=36b9c38eac77ac701927a4d90fa0788050810b67) (http://www.glitter-graphics.com) 
Iniya Iniya Pirantha Nall Vazhalthukal ma
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fdl9.glitter-graphics.net%2Fpub%2F669%2F669159mp1s3xap4d.gif&hash=7a1e9caa8f72f1e43c13d9ddf13848e9897b3c91) (http://www.glitter-graphics.com)(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fdl9.glitter-graphics.net%2Fpub%2F669%2F669159mp1s3xap4d.gif&hash=7a1e9caa8f72f1e43c13d9ddf13848e9897b3c91) (http://www.glitter-graphics.com)(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fdl9.glitter-graphics.net%2Fpub%2F669%2F669159mp1s3xap4d.gif&hash=7a1e9caa8f72f1e43c13d9ddf13848e9897b3c91) (http://www.glitter-graphics.com)
  nenga ipo irukurathu pola eppaiyum sirichutu happy a nalla health ooda irukka venum nu andha kadavul kitta vendikuren amma
God Bless You Ma
Title: Re: தாய்க்கு ஒரு வாழ்த்து!
Post by: RishiKa on June 22, 2019, 09:29:05 PM


Thank you for ur Prayer and wish  DORA babe ... :-* :-*  :-* :D
Title: Re: தாய்க்கு ஒரு வாழ்த்து!
Post by: Guest 2k on June 23, 2019, 10:29:12 AM
அம்மாவுக்கு மணி மணீ மோர் ஆப்பி ஆப்பி பொறந்த டே ரிஷூ பேபி. வாழ்த்த வயதில்லை விழுந்து கும்புட்டுக்கிறேன் _/\_
Title: Re: தாய்க்கு ஒரு வாழ்த்து!
Post by: Unique Heart on June 25, 2019, 12:41:40 AM
தாயை வாழ்த்த  வார்த்தைகள் போதுமானது  அல்ல,
 எனினும்  தாயிற்கென வாழ்த்துரை வரைந்தமைக்கு
மனமார்ந்த வாழ்த்துக்கள் ❤️