ஓவியம் உயிராகிறது ( படம் பார்த்து கவிதை கிறுக்கு ..)
நண்பர்கள் கவனத்திற்கு ....
சொந்த ஆக்கமும் ஊக்கமும் கொண்ட உங்களுக்காக உங்கள் சிந்தனை திறனை வளர்ப்பதற்கும் உங்கள் கற்பனைகளை மெருகூட்டுவதர்க்கும் ஏதுவாக உங்களுக்காக இந்த களம் அமைக்கப்பட்டு இருக்கிறது...
இங்கு ஒரு ஓவியம் அல்லது நிழல் படம் கொடுக்கப்படும் ... அந்த ஓவியத்துக்கு உங்கள் கற்பனைகளில் தோன்ற கூடிய உங்களால்
உயிர் கொடுக்க கூடிய சிந்தனைகளை கவிதை கிறுக்கல்களாக பதிவு செய்யலாம் ....
**இங்கே நீங்கள் சுயேட்சையாக புதிய பதிவுகளை மேற்கொள்ள முடியாது.இப்பகுதியில் கவிதை பதிவதற்கு முன்பதிவு செய்வது கூடாது. ( உங்கள் பதிவுகள் அழகுற அமைவதற்காக )..
***தயவு செய்து இங்கே பதியப்படும் பதிவுகளுக்கு யாரும் கமெண்ட்ஸ் போட வேண்டம்... அந்த நபருக்கு நீங்கள் பிரத்தியேகமாக pvt தகவலாக உங்கள் வாழ்த்து , தகவல்களை தெரிவித்து கொள்ளலாம் .
**முதலில் சொந்தமாக பதியப்படும் 8 கவிதைகள் மட்டுமே பிரதி சனிக்கிழமை அன்று நண்பர்கள் இணையதள வானொலியில் கவிதை நிகழ்ச்சியாக தொகுத்து வழங்கப்படும்.
.
நிழல் படம் எண் : 221
இந்த களத்தின்இந்த நிழல் படம் FTC Team சார்பாக வழங்கப்பட்டுள்ளது ... ..... இந்த படத்திற்கு உங்கள் கவிதைகளால் உயிர் கொடுங்கள்...
.
உங்கள் கவிதைகளை எதிர்வரும் புதன்கிழமை GMT நேரம் 5:00 PM இக்கு முன்னதாக பதிவு செய்யவும்
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Ffriendstamilchat.org%2Fnewfiles%2F0Latest%2FOU%2F221.jpg&hash=06547cd95d514bdd3f49afe95901c4045ca4439a)
உருண்டு திரண்ட உலகமிது..
சுருண்டு போனது ஏழ்மையினால்.
சிறந்த பிறப்பாம் மனித இனம்..
வறண்டு போனது சுரண்டலினால்.
மருந்து காணா நோய் ஒன்றே..
அதுதான் பசி என்றார் முன்னோர்.
அப்பிணி பிடித்த கூட்டமொன்றை..
அவனியில் படைத்தார் சில வரியோர்.
ஏழ்மை கொண்ட மனித இனம்..
தாழ்மை கொண்டே தலைகவிழ..
வாய்மை இல்லா வரியவர்தான்..
வாரி சுருட்டி வாழ்கிறாரே.
கழனி எல்லாம் சீர் செய்து..
பசுமை போர்த்தி பயிர் செய்து..
ஊரார் பசிதனை தீர்த்திட்ட..
உழவனுக்கின்று சோரில்லை.
பருத்தி பஞ்சில் நூல் செய்து..
பாங்காய் அதில்தான் துணி நெய்து..
நாட்டார் மானம் காத்திட்ட..
நெசவாளிக்கு உடையில்லை.
அவசியமென்றே நாம் எண்ணும்..
அறை பலகொண்ட இல்லமதை..
அழகியல் சேர்த்தே நமக்களித்த..
கலைஞனுக்கிங்கோர் வீடில்லை.
இப்படியான இழிநிலையை..
எதுதான் நம்மில் புகுத்தியதோ?
என்றே கொஞ்சம் எண்ணினாலே..
எல்லாம் சீராய் மாற்றிடலாம்.
கம்யூனிச கொள்கைகளை..
கச்சிதமாக பயன்படுத்தி..
இச் சமுதாய சீர்கேட்டை..
எளிதாய் நாமும் சரிசெய்து..
சுரண்டி பிழைக்கும் மனிதர்களை..
சுதந்திரமற்று போகச் செய்வோம்.!!!
பொதுவுடைமைவாதி பீன்.....
[/b]
[/size][/color]