FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Unique Heart on June 15, 2019, 11:16:58 PM

Title: காதலும், நட்பும்
Post by: Unique Heart on June 15, 2019, 11:16:58 PM
வாழ்வில்  எல்லாவருக்கும்  எல்லாமும் கிடைப்பது  இல்லை,
 பணமிருப்பவன் இடத்தில் சந்தோஷம் இருப்பதில்லை,
ஏழைக்கு  வாழவே வழி இல்லை,  இப்படி  இருக்க,
பணக்காரன், ஏழை , பெரியவர், சிறியவர்  என்று
அனைவருக்கும்  கிடைக்குமானதாக ஏதேனும்  இருக்கும்  என்றால்.

அது காதலும் நட்புமே.   

நட்பு  எனும்  சுவையை  சுவைக்க  மறந்தந்தவரும்  இல்லை,
காதல் எனும் கடலை  கடக்காதவரும் இல்லை.

உறவுகளே !  துயரங்கள்  எதுவாக இருப்பினும் துடைக்க  வல்லது  நட்பு,
வலிகள்  எவ்வளவு  கடினமான போதும்  கரைக்க  வல்லது காதல்...

காதல்,நட்பு  எனும் கடலில்  மூழ்கி  முத்தெடுப்பவனே இங்கு  முழுமையான
சந்தோஷத்தை  உணர்கிறான்..

இவ்வுலகில்  அதிகமான  மகிழ்ச்சியை  ஒன்று  தருமாக  இருப்பின் 
அது காதலும், நட்புமே....

நட்பை பகிர்ந்து, காதல்  பெற்று  மகிழ்ச்சியுடன் வாழ  பிராத்திக்கும்
உங்களின் உறவாளன்  (MNA).........