FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: RishiKa on June 12, 2019, 09:09:05 PM
-
என் உறக்கத்தை பறித்து கொண்ட ..
இரவே உனக்கு ஒரு வேண்டுகோள் !
என் நினைவு சுமைகளின் ...
பாரம் தாங்காமல் .....
என் விழிகளின் திரையை ..
மூட மறுத்து விட்டாய் !
ஒவ்வொரு வினாடியும் ..
நரகமாய் நகரும் ...
ஒவ்வொரு மணி துளியும் ..
ஒரு யுகமாய் கழியும் ...
மரணத்தை விட கொடுமையானது ..
இங்கே மறக்க படுவது ...
வெறுப்பவர்களிடம் கூட விலகி ...
இருக்கமுடியாத இந்த மனம் ...
பிரிவு என்ற பாதையில் ..
அழைத்து சென்றவர்களுக்காக ..
காத்து கொண்டு இருக்கும் ..
முட்டாள்களில் நானும் ஒருத்திதான் ..
அதற்காக என் உறக்கத்தை
பறிப்பது என்ன நியாயம் ?
அன்பு வாய்த்த உறவும் இல்லை அருகில் ..
நேசம் வைத்த நட்பும் இல்லை ...
எத்தனை நீளுமோ இந்த தனிமை ..?
இரவே நீயும் செய்வது கொடுமை ....
நித்தமும் எனக்கு ..
நீண்ட வலிகள் தரும் காரிருலே!
ஒன்று நித்ரா தேவியை அழைத்து வா ..
இல்லையேல் மீளா உறக்கத்தை கொடு !
இரவே இரக்கம் காட்டு !
-
அழகே
வாழ்க்கை அழகானது தான்
நாம் தான் புரிதல்களில் அழகின்றி
போகிறோம்
உன்னை விட இந்த உலகத்தில்
யாரும் சிறந்தவர்கள் இல்லை
கவிதைகளால் உனக்கு பெருமை இல்லை
உன்னால் கவிதைகள் பெருமை
அடைகிறது
(https://i.postimg.cc/fJSkg3jV/1317285866660726.jpg) (https://postimg.cc/fJSkg3jV)