FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: சிற்பி on June 09, 2019, 04:36:27 PM
-
வான்நிலவை
தான் மறைத்து
வைகறையில்
அவள் விழித்தாள்
வாசலிலே
நீர் தெளித்து
வண்ண வண்ண
கோலமிட்டாள்
வானவில்லை தான்பிடித்து
வண்ணங்களால் தூவிவிட்டாள்
தென்பொதிகை சாரலிலே
தேன் தமிழாய் பிறந்தவளாம்
தென்றலிலே தவழ்ந்து வந்து
திங்களென வளர்ந்தவளாம்
தமிழன்னை ஈன்றெடுத்த
தங்கமகள் அவளன்றோ
வர்ணனைகள் சொல்வதற்கு
வார்த்தை இல்லை
என்னிடத்தில்
அவள் கால்கொலுசின்
ஓசைதனில் காவியங்கள்
உருவாகும்
காலடி சுவடுகள் தான்
காப்பியங்கள் ஐந்தாகும்
சாலையோர பூக்கள்
எல்லாம்
அவள் வருகை பார்த்து
வாழ்ந்திருக்கும்
சில சாரல் பார்வைகள்
அவள் தந்தாள்
மழை தூரல்
நெஞ்சை நனைத்துவிடும்
அன்றில் பறவையின்
அன்பு மனம்
அவள் அன்ன பறவையின்
அழகு குனம்
எனது
இதயத்தை வளை வீசி
பிடித்து சென்றால்
அவளை எப்படி
நான் பிடிப்பேன்...
...சிற்பி...